The Indian Times

ஸ்வீட் சாப்பிட மாட்டியா? மேடையிலேயே மணமகளை வெளுத்து கட்டிய மணமகன் | Angry Groom Slaps Bride

வட இந்தியாவில் நடக்கும் திருமணங்கள் சற்று வித்தியாசமானவை. நலங்கு தொடங்கி மருதாணி வைப்பது என பல விதமான நிகழ்ச்சிகளை முடித்த பிறகுதான் கல்யாணம் செய்து கொள்வர். அங்கு நடக்கும் வித விதமான காமெடி கலாட்டாக்களுக்கு பஞ்சம் இல்லை. அதிலும் குறிப்பாக வட இந்தியாவில் நடைபெறும் திருமணங்களில் நடக்கும் காமெடி சம்பவங்களை தொகுத்து வீடியோவாக வெளியிட்டு பார்வையாளர்களை அள்ளும் யூடியூப் சேனல்கள் ஏராளம். வட இந்தியா என்று டைப் செய்தாலே Funny Marriage Video என்று யூடியூப்பே Suggestion காட்டும் அளவிற்கு பிரபலமானவர்கள் தான் வட இந்தியர்கள்.

Advertisement

மாலை போடும் போது வேஷ்டி அவிழ்ந்து விழுவது, குதிரையில் அமர்ந்து மாப்பிள்ளை ஊர்வலம் செல்லும் போது தீடீரென குதிரை மிரண்டு ஓடி மாப்பிள்ளையை கீழே தள்ளி விடுவது, மேடையில் ஆடிக் கொண்டிருக்கும் போதே மேடை உடைந்து மணமகளும், மணமகனும் கீழே விழுவது போன்ற தமாஷான நிகழ்வுகள் அரங்கேறி வரும். அது மட்டுமில்லாமல் மாலையை ஒழுங்காக போடாமல் மணமகனிடம் அறை வாங்குவது போன்றும், பாக்கெட்டில் பான் பொருட்கள் வைத்திருந்த காரணத்தால் மணமனை கன்னத்தில் பளார் பளார் என அறைந்த மணமகளின் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்வையாளர்களை அள்ளியது.

Advertisement

தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் மணமகன், மணமகளுக்கு இனிப்பு ஒன்றை ஊட்டுகிறார். அனால் மணமகள் வாயை திறக்காமல் இருந்ததால் அவர் கோபமாகி இனிப்பை பெண்ணின் முகத்திலேயே விட்டு எறிகிறார். இதனால் கடுப்பான பெண் மீண்டும் அவர் முகத்தில் இனிப்பை விட்டு எறிகிறார். பெண் செய்த இந்த செயலால் ஆத்திரம் அடைந்த மணமகன் பெண்ணை சரமாரியாக அடிக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video…

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in