The Indian Times

மீண்டும் மோசமானது உடல்நிலை..மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

ஐஸ்வர்யா சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். எவ்வளவு முன்னெச்சரிக்கையாக இருந்தும் தனக்கு கொரோனா வந்துவிட்டதாகவும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் இன்ஸ்டாகிராமில் தெரிவித்து இருந்தார். அனைவரும் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணியுமாறும், தடுப்பூசி எடுத்து கொள்ளுமாறும் அவர் கேட்டு கொண்டார். 2022ல் இன்னும் என்ன என்னவெல்லாம் பார்க்க வேண்டுமோ எனவும் அவர் கூறியிருந்தார். Watch the below video…

Advertisement

 

இவர் பயணி என்ற ஆல்பம் சாங் ஒன்றை தயாரித்துள்ளார். இதில் தனது பெயரை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என மாற்றி இருந்தார். நாளை மகளிர் தினத்தன்று அந்த ஆல்பம் வெளியாக உள்ள நிலையில் தற்போது மீண்டும் உடல்நலம் குன்றியுள்ள ஐஸ்வர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மீண்டும் காய்ச்சல் தலைசுற்றல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டள்ளார். இதை இன்ஸ்டாகிராமில் அவரே பகிர்ந்துள்ளார். மனைவி இப்படி மருத்துவமனையில் இருக்கும் சூழலில் அவரது கணவர் தனுஷ் தனது செல்ல பிராணி நாய்களுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து மீண்டும் என் படங்களுடன் என்று பதிவிட்டுள்ளார். Youtube Video Code Embed Credits: Trend Talks

Advertisement

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா தனுஷ். இவர் கடந்த 18 வருடங்களுக்கு பிரபல இயக்குனர் கஸ்தூரி ராஜா அவர்களின் இளைய மகனான நடிகர் தனுஷ் அவர்களை மணம் முடித்தார். தன்னைவிட வயதில் மூத்தவர் என்ற போதிலும் பல எதிர்ப்புகளுக்கும், சச்சரவுகளுக்கும் நடுவில் தனுஷ் ஐஸ்வர்யாவை கரம் பிடித்தார். 18 வருடங்கள் கடந்து விட்டப் பிறகு தானும் ஐஸ்வர்யாவும் பிரிந்து விட்டதாகவும், மனைவியாகவும், நல்ல தோழியாகவும் இருந்த ஐஸ்வர்யாவுக்கு நன்றி எனவும், தாங்கள் இருவரும் இனி தனித்தனியாக தங்கள் பணத்தை தொடர உள்ளதாகவும், தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் தனுஷ் தெரிவித்து இருந்தார்.

https://youtu.be/uzOI4AFDBn0

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in