The Indian Times

அட்லீ படத்தையே காப்பி அடித்த கொரியன் திரைப்படம்? இது என்ன புதுசா இருக்கு

தமிழ் சினிமாவில் ஏற்கனவே வெளியான படங்களின் கதைகளையே காட்சிகளையோ புதிதாக இயக்கும் திரைப்பட இயக்குனர்கள் காப்பி அடித்து படங்கள் எடுப்பது வழக்கமாகிவிட்டது. ந்த வகையில் அதிகமாக விமர்சிக்கப்படும் இயக்குனர் அட்லீ தான். இவர் இயக்கிய 4 படங்களுமே வெற்றி கண்டது என்றாலும் அந்த படத்தின் கதையை அட்லீ காப்பி அடித்து தான் எடுத்தார் என்று இன்றும் பலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

இவரது முதல் திரைப்படமான ராஜா ராணியும் சேரி இறுதியாக வெளிவந்த பிகில் திரைப்படமும் செரி இன்றும் ஒரு கூட்டம் இந்த படங்களின் கதைகள் காப்பி என்று தான் கூறிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அட்லீ இயக்கிய படத்தின் ஒரு காட்சி கொரியன் படத்தின் மூலம் காப்பி அடிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாகியுள்ளது. அட்லீ விஜய் கூட்டணியில் மிக பெரிய வெற்றி அடைந்த திரைப்படம் தெறி. ரசிகர்களின் பல்ஸை புரிந்து மிகவும் சிறப்பான ஒரு படைப்பை விஜய் ரசிகர்களுக்கு கொடுத்தார் அட்லீ.

Advertisement

அந்த படத்தில் ஒரு காட்சியில் கொளுத்து வேலை செய்யும் கூலி தொழிலாளிகள் வேலை பார்த்து கொண்டிருக்கும்போது கீழே விழுந்து இறந்து கிடப்பார்கள் அப்போது அங்கு வந்த வில்லன் அழகம் பெருமாள் அங்கு இறந்து கிடைக்கும் கூலி தொழிலாளியின் மகனுக்கு பணத்தை கொடுத்து சாக்லட் வாங்கி சாப்பிட சொல்வார். அதன் பிறகு விஜய் அதே போல் அவரை மேலிருந்து கீழே தள்ளி கொன்றதும் அந்த பையன் சாக்லட் சாப்பிடுவர்.

இந்த காட்சி திட்டரையே அதிரவைத்தது. இந்நிலையில் அதே போல் தற்போது 2020 ஆம் ஆண்டு வெளியான கலெக்டர்ஸ் என்ற கொரியன் திரைப்படத்தில் அதே போன்ற காட்சி அமைந்துள்ளது.

தன் தந்தையை கொன்ற வில்லனை பழிவாங்கி அவர் இறந்த பிறகு , தன் தந்தையின் சாவின் பொது கொடுத்த சாக்லட்டை , இவர் இறந்த பிறகு ஹீரோ அவருக்கு கொடுக்கும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in