The Indian Times

விஜய் சேதுபதி நடிச்ச இந்த Short Film அ பாத்துருக்கீங்களா? video உள்ளே

தமிழ் சினிமாவில் இயல்பாக நடித்து பல இதயங்களை கவர்ந்த நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான். ஹீரோ கதாபாத்திரம் என்றாலும் சரி வில்லன் கதாபாத்திரம் என்றாலும் சரி அதை தன் தத்ரூபமான நடிப்பில் நடித்து முடித்து கொடுப்பார். இவர் இறுதியாக நடித்து வெளிவந்த திரைப்படம் குட்டி ஸ்டோரி. அதில் ஒரு பாகத்தில் நடித்திருந்தாலும் அனைவரையும் ரசிக்கும்படி செய்தார்.

Advertisement

அதற்கு முன்பு இவர் வில்லனாக நடித்து வெளிவந்த மாஸ்டர் திரைப்படம், மிக பெரிய அளவில் பேசப்பட்டது. இதை தொடர்ந்து துக்லக் தர்பார் , காதுவக்குல ரெண்டு காதல் , யாதும் ஊரே யாவரும் கேளிர் , லாபம் , மாமனிதன் என பல படங்கள் இவர் நடிப்பில் வெளியாக உள்ளது. இன்று இவர் உச்சத்தில் இருக்கும் முன்னணி நடிகராக விளங்கினாலும் ஆரம்பகாலங்களில் பல இன்னல்களை கடந்து தான் வந்திருக்கிறார்.

Advertisement

இந்நிலையில் இவர் முதல் முதலாக நடித்த அத்தியாயம் என்ற குறும்படம் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த படத்தில் ஏழை குடும்பத்தை சேர்ந்த விஜய் சேதுபதி குடி பழக்கத்திற்கு அடிமையானவர் போல் நடித்திருப்பார். இதை தொடர்ந்து அவர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்திலும் ஒரு குறும்படம் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in