Lady Superstar ஆக இருந்தும், simple ஆக தரையில் அமர்ந்து சப்பாத்தி சாப்பிடும் நயன்தாரா! Viral Video உள்ளே
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மட்டுமல்லாமல் லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டதோடு அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவில் ஐயா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று அணைத்து முன்னணி தமிழ் நடிகர்களுடனும் ஜோடி போட்ட நடிகை நயன்தாரா. தற்போது இவர் அண்ணாத்த மற்றும் நெற்றிக்கண் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை நீண்ட நாட்களாக காதலித்து வருவது அனைவரும் அறிந்தது. விக்னேஷ் சிவன் தமிழில் நானும் ரௌடித்தான், தானா சேர்ந்த கூட்டம் என்ற படங்களை இயக்கி உள்ளார். இவர் தற்போது விஜய் சேதுபதி , சமந்தா ஆகியோரை வைத்து காதுவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் நயன்தாராவுடன் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படங்களையும் அவ்வப்போது விக்னேஷ் சிவன் வெளியிட்டு வருகிறார்.

எங்கு சென்றாலும் ஜோடியாக புகைப்படம் எடுத்து சோசியல் மீடியாவில் அப்லோட் செய்து வரும் இந்த ஜோடிகள் சமீபத்தில் கூட ஒன்றாக சேர்ந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவரும் வட இந்தியாவில் உள்ள கோல்டன் டெம்பிளில் தரையில் அமர்ந்து சப்பாத்தி சாப்பிட்ட வீடியோ சமீகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in