The Indian Times

பவித்ரா லட்சுமி நடித்த “ஏனென்றால் காதல் என்பேன்” Musical Short Film

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக இருப்பவர் பவித்ரா லட்சுமி.இவர் ஏற்கனவே சில குறும்படங்களில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து மாடலிங் , போட்டோஷூட் செய்து வருகிறார் பவித்ரா. என்ன தான் சில குறும்படங்களில் நடித்திருந்தாலும் மாடலாக இருந்தாலும் , இன்று அனைவருக்கும் தெரிந்த பிரபலமாக இருப்பதற்கு காரணம் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

Advertisement

இது மட்டுமில்லாது குக்கு வித் கோமாளிக்கு பிறகு தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் வரிசைகட்டி நிற்கின்றன. காமெடி நடிகர் சதிஷ்க்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார் பவித்ரா. இந்நிலையில் தற்போது இவர் நடித்துள்ள ஏனென்றால் காதல் என்பேன் என்ற musical short film வெளியாகியுள்ளது. இதில் பவித்ராவுக்கு ஜோடியாக விஜய் தங்கையன் தான் இந்த short film ஐயும் இயக்கியுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in