கமல் சாரை நான் தப்பா பேசுனேனா… தேவையில்லாமல் இதை பண்ணாதீங்க.. எதிரிகளை கடுமையாக எச்சரித்த அசீம்

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.தமிழில் இதுவரை 5 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 5 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.மேலும் கூடுதலாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பியது.இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி போன்ற வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ஹனிமூன் அழைத்துப்போக சொல்லி சரவணனிடம் சண்டையிடும் தங்கமயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

கமல் சாரை நான் தப்பா பேசுனேனா... தேவையில்லாமல் இதை பண்ணாதீங்க.. எதிரிகளை கடுமையாக எச்சரித்த அசீம் 1

விளம்பரம்

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி முதல்தொடங்கி முடிவடைந்துள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இதில் அசீம் பிக் பாஸ் கோப்பையை தட்டி சென்றார். இதனால் விக்ரமன் ரசிகர்கள் கடும் சோகத்திற்கு ஆளாகினர்.

கட்டாயம் படிக்கவும்  முற்றிய சண்டை கதிரை பளார் என அறைந்த பாண்டி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

கமல் சாரை நான் தப்பா பேசுனேனா... தேவையில்லாமல் இதை பண்ணாதீங்க.. எதிரிகளை கடுமையாக எச்சரித்த அசீம் 2

விளம்பரம்

இந்நிலையில் அசீம் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் அவர் கூறியதாவது,அண்மையில் நான் கலந்துகொண்ட பேட்டி ஒன்றில் என்னிடம்  பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்படி கோவப்படுறீங்களேன்,உங்க பையன் பார்ப்பார் என கேள்வி எழுப்பினர் அதில் ,ஏன்டா என் பையனுடன் நேரத்தினை செலவழிக்க பல்லாயிரம் நாட்கள் இருக்கிறது,பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து என் பையன் வளரணும்னு எந்த அவசியமும் இல்லைஎன கூறினேன்.நான் எதார்த்தமாக கூறிய ஒன்றை கமல்ஹாசனை தாக்கி பேசியதாக இணையத்தில் செய்திகள் வேகமாக பரவியாது.ரசிகர்கள் என்னிடம் கேட்ட கேள்விக்கு பதில் கூறினேன்,ஆனால் அதை என்னை வெறுப்பவர்கள் நான் கமல்சாரை கூறியது போல சித்தரித்துவிட்டனர்,கமல் சார் எனக்கு அவ்ளோ புடிக்கும்,அவர் என் நலனுக்காக தான் அவ்வாறு கூறினார், நான் அவரை பற்றி ஒன்றுமே கூறவில்லை,தேவையில்லாமல் இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்,கமல் சார் எனக்கு அப்பா மாதிரி,இதுக்கெல்லாம் அசருகிற ஆள் இந்த அசீம் அல்ல என எதிரிகளை கடுமையாக எச்சரித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment