The Indian Times

உங்களை பார்ப்பேன்னு நினைக்கல மக்கள் ஸ்டார் ரட்சிதா…. ரசிகர்களுக்காக SURPRISE VISIT கொடுத்த ரட்சிதா

சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமாகியவர் ரட்சிதா.நடிப்பின் மீது ஆர்வம் உள்ள ரட்சிதா வெள்ளித்திரையில் வாய்ப்பு தேடி வந்த நிலையில் இறுதியாக சின்னத்திரையில் தான் வாய்ப்பு கிடைத்தது.அதன்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகினார். அதன்பின் இவர் பல நாடகங்களில் நடித்தும் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு எந்த நாடகத்திலும் கிடைக்கவில்லை தொடர்ந்து போராடிய ரட்சிதாவிற்கு இறுதியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி தொடரில் வாய்ப்பு கிடைத்தது.இந்த தொடரில் மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது.இன்றுவரை பலரும் இவரை மீனாட்சி என்று தான் அழைத்து வருகிறார்கள்,அந்தளவுக்கு மக்கள் மனதில் பதிந்துவிட்டார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது விஜய் தொலைக்காட்சியை தொடர்ந்து ஜீ தொலைக்காட்சி,கலர்ஸ் டிவி என பல சேனல்களிலும் நாடகங்களில் நடிக்க தொடங்கி விட்டார்.தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் சொல்ல மறந்த கதை எனும் சீரியலில் நடித்து வருகிறார்.இந்த சீரியலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோ செய்து பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ரக்ஷிதா.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.மேலும் பிக் பாஸ் 6வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு தன்னால் முடிந்தவரை விளையாடி மக்களை மகிழ்வித்தார்.

இந்த நிகழ்ச்சியில் இருந்து யாரும் எதிர்பாராத வண்ணம் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறினார்.இது இவரது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை கொடுத்தது.பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வீட்டிற்கு வந்த இவருக்கு பல ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் கோலாகலமாக இவரை வரவேற்றனர். தற்போது பிரபல யூடியூப் சேனல் ரட்சித்தாவிற்கு ரசிகர்கள் சந்திப்பு நடத்தியுள்ளது.இந்த சந்திப்பில் ரசிகர்களுக்கு ரட்சிதா சர்ப்ரைஸ் ஆக என்ட்ரி கொடுத்துள்ளார், அவரை பார்த்த ரசிகர்கள் பேச்சுமூச்சு இன்றி திக்காடி அழுதும் உள்ளனர்.இந்நிலையில் இதனை பார்த்த நெட்டிசன்கள் என்னடா சூப்பர் ஸ்டார் ,தளபதி,தல ய பார்த்தா கூட இப்படி பண்ணமாட்டாங்க,நீங்க ஓவரா பண்றீங்களே என கூறி கலாய்த்து வருகின்றனர்

https://youtu.be/ErmkaaFAewI?t=186

Embed video credits : GALATTA TAMIL

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in