ஐலா செய்வதை பார்த்து வயிறுகுலுங்க சிரித்த ஆல்யா மானசா மகன் அர்ஷ்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி தொடரில் கதாநாயகி மற்றும் கதாநாயகனாக நடித்து பிரபலமாகியவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.ராஜா ராணி என்று கூறினாலே நமது மனதில் முதலில் நினைவுக்கு வருவது இந்த ஜோடிகள் தான். சஞ்சீவ் முன்னதாக திரைப்படங்களில் நடித்து வந்தார்.இவர் முதன் முதலில் குளிர் 100 டிகிரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகினார்.பின்னர் ராஜா ராணி நாடகத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி கொண்டு நடித்து மக்களை கவர்ந்தார்.இந்த ராஜா ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஆல்யா.ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழக இறுதியில் நட்பு காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இரண்டு நாள்ல உங்க அம்மா வீட்டை விட்டு போயிருக்கனும்...கோபியை எச்சரித்த ராதிகா... பாக்கியலட்சுமி ப்ரோமோ

ஐலா செய்வதை பார்த்து வயிறுகுலுங்க சிரித்த ஆல்யா மானசா மகன் அர்ஷ் 1

விளம்பரம்

இவர்களுக்கு ஏற்கனவே ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.தற்போது ஆல்யாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதனால் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.இவர்கள் தங்களது இனிமையான நேரங்களை மகன் மற்றும் மகள் உடன் செலவழித்து கொண்டு வருகின்றனர்.இருவரும் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துக்கொண்டு அதில் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் செலவு செய்யும் நேரத்தினை வீடியோவாக பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.தற்போது ஆல்யா சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  மாடர்ன் உடையில் மாஸ் காட்டும் CWC சுஜிதாவின் கலக்கலான புகைப்படங்கள்

ஐலா செய்வதை பார்த்து வயிறுகுலுங்க சிரித்த ஆல்யா மானசா மகன் அர்ஷ் 2

விளம்பரம்

தற்போது இவர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த வீடியோவில் ஆல்யா மானசா மகள் ஐலா தம்பி அர்ஷை சிரிக்க வைத்துள்ளார்.அக்கா செய்வதை பார்த்து வயிறுகுலுங்க அர்ஷ் சிரித்துள்ளார். வீடியோவை பார்த்த ரசிகர்கள் அர்ஷ்க்கு அக்கா மேலையும் அக்காவுக்கு அர்ஷ் மேலயும் எவ்வளவு பாசம் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் மேலும் குழந்தை சிரிக்கும் பொழுது பார்க்க அவ்வளவு ஆனந்தமாக இருப்பதாக கூறியுள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  திரும்ப வரும் புதிய பிரச்சனை.. ஈஸ்வரிக்கு போன் செய்த ஜீவானந்தம்.. வெளியான எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment