The Indian Times

பிரியங்கா உடையை தொட்ட ராமர்… பளார் என அறைகொடுத்த அறந்தாங்கி நிஷா… எல்லைமீறியதாக கொந்தளிக்கும் ரசிகர்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய அது இது எது என்ற நிகழ்ச்சியின் மூலம் மிக பிரபலமடைந்தவர் ராமர்.இந்த நிகழ்ச்சியில் உள்ள உள்ள சிரிச்சா போச்சு என்ற சுற்றில் சக கலைஞருடன் வந்து நகைச்சுவை செய்து மக்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.பின்னர் பிரபல நிகழ்ச்சி ஒன்றை கலாய்த்து இவர் செய்த நகைச்சுவை மாபெரும் வைரலாகியது.அன்று முதல் தற்போதுவரை ராமரை என்னம்மா ராமர் என்று தான் அழைத்து வருகிறார்கள்.மக்களை மகிழ்விக்கும் மகத்தான வேலையை ராமர் செய்வதால் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

ஆரம்பத்தில் கலக்கப்போவது யார் என்ற நிகழ்ச்சி மூலம் விஜய் தொலைக்காட்சிக்குள் நுழைந்து இன்று இவர் இல்லாத நிகழ்ச்சியே தற்போது இல்லை என்ற அளவிற்கு உயர்ந்துவிட்டார்.தற்போது வரை அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று மக்களை வயிறுகுலுங்க சிரிக்க வைக்கின்றார்.இவர் மனப்பாடம் பண்ணிட்டு வரும் வசனங்களை மறந்து இவர் அந்த இடத்திலேயே பேசும் வசனம் தான் மக்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது.அந்த அளவிற்கு நகைச்சுவை மன்னனாக விஜய் தொலைக்காட்சியில் உள்ளார்.

அண்மையில் ப்ரியங்கா மற்றும் மகாபா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் அறந்தாங்கி நிஷா உடன் கலந்துகொண்டார்,அப்பொழுது எதார்த்தமாக பிரியங்கா உடையில் கை வைத்துள்ளார் ராமர், அவர் விளையாட்டாக செய்துள்ளதை அறந்தாங்கி நிஷா அப்பொழுதே கண்டித்தும் உள்ளார் மேலும் ரசிகர்கள் எப்படி பொதுநிகழ்ச்சியில் பெண் உடை மீது கைவைத்து எல்லை மீறலாம் ,இதை ராமர் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவே இல்லை என அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.இருப்பினும் அவர் விளையாட்டாக செய்வது வீடியோவில் நன்கு தெரிகிறது.இதோ அந்த வீடியோ

https://youtu.be/kBWHj49Trdk?t=42

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in