The Indian Times

பிக் பாஸ் 6 TITLE-யும் 50 லட்சத்தினையும் தட்டி தூக்கிய அசீம்… ரசிகர்கள் வாழ்த்துமழையில் அசீம்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த நிகழ்ச்சி தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி போன்ற மொழிகளில் பெரும் வரவேற்புகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது.ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் இந்த நிகழ்ச்சியை கண்டு களித்து வருகின்றனர்.தமிழில் இதுவரை 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்து 6வது சீசனில் அடியெடுத்து வைத்து அதையும் வெற்றிகரமாகத்தான் முடித்துள்ளது.ஒவ்வொரு சீசனுக்கும் ரசிகர்கள் கூட்டம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அதிகரித்து தான் வருகிறது.அந்தளவிற்கு மக்கள் இந்த நிகழ்ச்சியை விரும்புகின்றனர்.

Advertisement

இந்த நிகழ்ச்சிகளில் மக்களை அதிகம் கவர்ந்தது என்னவென்றால் மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் தான் இந்த போட்டியில் விளையாட முடியும் அவர்கள் மனது வைக்கும் நபர் தான் வெற்றிக்கோப்பையை பறிக்க முடியும். என்பதே.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, என 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.இதுவரை நடைபெற்ற சீசன்களில் போட்டியாளர்கள் யார் வெற்றிபெறுவார்,மக்கள் ஆதரவு யாருக்கு என்பதை முன் கூட்டியே கணித்துக்கொள்ள முடிந்தது. ஆனால் இந்த சீசனில் யார் வெற்றிபெறுவார் என்பது கணிக்க முடியாமல் இருந்தது.

Advertisement

தற்போது ஷிவின்,அசீம்,விக்ரமன் ஆகிய மூன்று பேர் மட்டுமே இறுதிக்கட்ட போட்டிக்கு மக்கள் ஆதரவுடன் வருகை தந்துள்ளனர்.இதில் இந்த முறை பிக் பாஸ் 6 டைட்டிலயும் 50 லட்சம் பணத்தினையும் வெற்றிபெற்றுள்ளது அசீம் ஆகும்.ஆரம்பத்தில் இருந்து தொடர்ந்து அவருக்கு மக்கள் தங்களது ஆதரவினை கொடுத்து வந்து இன்று அவரை வெற்றிபெற செய்துள்ளனர்.இரண்டாவது இடத்தினை விக்ரமனும் மூன்றாவது இடத்தினை ஷிவினும் பெற்றுள்ளனர்.ரசிகர்கள் அசீமின் வெற்றியை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in