The Indian Times

மச்சான் நம்ம ஜெயிச்சிட்டோம்… அசீமை கட்டியணைத்து முத்தமிட்ட ADK

தமிழில் 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து 6வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி அக்டொபர் 9ஆம் தேதி முதல் தொடங்கி உள்ளது.100 நாட்கள் 20க்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டு போட்டிபோட்டு இறுதியில் வெல்பவருக்கு 50 லட்சம் பணமும் பிக் பாஸ் டைட்டிலும் வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி போன்ற மொழிகளிலும் அங்குள்ள நடிகர்களை வைத்து நடத்தப்பட்டு வருகிறது.தமிழில் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன், ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்,இதில் 17 பேர் வெளியேறிய நிலையில் அசீம்,விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய மூவர் மட்டும் இறுதிப்போட்டிக்கு தேர்வாகி அதில் அசீம் வெற்றியும் பெற்றுள்ளார்.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து நண்பர்களாக உள்ள ஏடிகே மற்றும் அசீம் இடையில் பயங்கரமாக சண்டையிட்டுக்கொண்டனர்.தற்போது நிகழ்ச்சி முடிந்த உடன் அதையெல்லாம் மறந்து மீண்டும் ஒன்று சேர்ந்து அசீம் வெற்றியை ஏடிகே கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் ,மேலும் அசீமிற்கு முத்தமிட்டும் ஏடிகே தனது பாசத்தினை வெளிக்காட்டியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,ரசிகர்கள் இருவரும் இப்படியே ஒற்றுமையாக இருங்கள் என கூறி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in