பல லட்சம் வாக்குகள்.. ஒரே வெற்றியாளர்… யார் அவர்?.. வெற்றியாளரை அறிவிக்க போகும் கமல்….

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.தமிழில் இதுவரை 5 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 5 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.மேலும் கூடுதலாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பியது.இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி போன்ற வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

பல லட்சம் வாக்குகள்.. ஒரே வெற்றியாளர்... யார் அவர்?.. வெற்றியாளரை அறிவிக்க போகும் கமல்.... 1

விளம்பரம்

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.தற்போது 17 போட்டியாளர்கள் வெளியேறி ஷிவின், அசீம் மற்றும் விக்ரமன் மட்டுமே இறுதி போட்டியாளர்களாக மாறியுள்ளனர்.

பல லட்சம் வாக்குகள்.. ஒரே வெற்றியாளர்... யார் அவர்?.. வெற்றியாளரை அறிவிக்க போகும் கமல்.... 2

விளம்பரம்

தற்போது இன்றைய இறுதி நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.ப்ரோமோவில் வந்த உலகநாயகன் பல லட்சம் வாக்குகள்.. ஒரே வெற்றியாளர்… யார் அவர் என கூறி ஆரம்பித்துள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் யார் வெற்றிபெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்துள்ளது. மேலும் பலரும் வெற்றியாளர் யார் என்பதை தெரிந்துகொள்ள பெரும் ஆவலுடன் இருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment