The Indian Times

சரண் உடன் இனியா சுற்றுவதை பார்த்த பாக்கியலட்சுமி… ஐயயோ அம்மா பார்த்துட்டாங்களே என பயத்தில் உறைந்த இனியா.. பாக்கியலட்சுமி

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பாக்கியாவின் கணவர் கோபி குடும்பத்தை விட்டுவிட்டு அவர் கல்லூரியில் காதலித்த ராதிகாவை கரம்பிடித்துக்கொண்டார்.இதனால் குடும்பம் மொத்தத்தையும் ராதிகா ஒரே ஆளாகா பார்த்து கொண்டு வருகிறார்.மேலும் பாக்கியா கோபியிடம் இருக்கும் வீட்டை 20 லட்ச ருபாய் கொடுத்து தான் வாங்கவும் சவால் விட்டுள்ளார்.அதற்கான முயற்சியில் தற்போது இறங்கி அசத்தி வருகிறார்.தற்போது முன்பணமாக கோபிக்கு 2 லட்சம் கொடுத்துள்ளார்.மீதி 18 லட்சத்தினை ஒரு மாதத்திற்குள் தருவதாக கூறியுள்ளார்.

தற்போது இனியா பள்ளியில் சரண் என்பவருடன் பழகி வருகிறார்.டியூசன் முடித்து சரனுடன் இனியா பேசிக்கொண்டு வருவதை பாக்கியா ரோட்டில் பார்க்கிறார். பாக்கியாவை பார்த்து இனியா பேச்சு மூச்சில்லாமல் பயந்து நடுங்குகிறார்.ஆனால் பாக்கியா மகள் மீது துளியும் சந்தேகப்படாமல் அவள் மேல் உள்ள நம்பிக்கையில் சரனிடமும் இனியாவிடமும் நன்றாக பேசிக்கொண்டு செல்கிறார்.இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் பாருங்க இனியா அம்மா உங்க மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருக்காங்க ஒழுங்கா படிக்கிற வேலையே மட்டும் பாருங்க என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=NHsOwsqRi58

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in