The Indian Times

காலனி செக்ரட்டரி தேர்தலில் பாக்யாவுக்கு எதிராக ராதிகாவை நிறுத்திய கோபி…பாக்கியா படிக்கவில்லை என நக்கலடித்து ராதிகா | பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென குடும்பத்தலைவிகள் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.பாக்கியலட்சுமி நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.இதனால் பாக்கியா மற்றும் மகன்கள் அனைவரும் கோபியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

Advertisement

தற்போது காலனி தேர்தலில் பாக்கியா நிற்கவே,பாக்கியாவிற்கு எதிராக கோபி ராதிகாவை நிறுத்தியுள்ளார்.மேடையில் பேசும் ராதிகா படித்திருந்தால் மட்டுமே பதவியில் இருக்க முடியும் மேலும் அதனை சிறப்பாக செய்யவும் முடியும் என பாக்யலக்ஷ்மியை பார்த்து நக்கலாக பேசியுள்ளார்.இந்த ப்ரோமோ தற்போது பாக்யா ரசிகர்களிடம் பெரும் கோவத்தினை ஏற்படுத்தியுள்ளது.ராதிகா நீங்க வேணா படிச்சிருக்கலாம்,ஆனா எங்க பாக்கியா படிக்காத மேதை என கூறி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in