The Indian Times

என் மகள் எனக்கு திரும்ப கிடைச்சிட்டா… பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த உடன் ராபர்ட் அப்பாவை பார்த்த குயின்சி

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக பணியாற்றியவர் ராபர்ட் மாஸ்டர்.பல முன்னணி நடிகர்களுக்கும் நடனம் சொல்லி கொடுத்துள்ளார் இவர்.மேலும் எம்ஜி ஆர் ரஜினி கமல் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து சினிமாவில் கதாநாயகனாக கால் தடம் பதித்துள்ளார்.சினிமாவை விட்டு இவர் தற்போது சில ஆண்டுகளாக விலகி இருக்கிறார்.பட வாய்ப்புகள் ஏதும் சரிவர அமையாததால் தனது வாய்ப்புக்காக காத்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.இதில் கலந்துகொண்டு தனது திறமையை நிரூபித்து இழந்த அந்தஸ்தினை திரும்ப பெற முடிவு செய்து நிகழ்ச்சியில் பங்கேற்றார்.தற்போது வீட்டுக்குள் சுறுசுறுப்பாக இருக்கும் நபர்களில் இவரும் ஒருவர்.எந்த டாஸ்க் வந்தாலும் சும்மா அதிரடியாக பட்டையை கிளப்பி வருகிறார் ராபர்ட் மாஸ்டர்.அண்மையில் குறைவான வாக்குகளை பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.இது இவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது

Advertisement

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் இவருடன் கலந்துகொண்ட குயின்சி தனதுமகளை போல இருப்பதாக கூறி அவர் மீது அதிகம் பாசம் காட்டினார்.தற்போது வீட்டை விட்டு வெளியே வந்த குயின்சி ராபர்ட் மாஸ்டரை நேரில் சந்தித்துள்ளார் மேலும் ராபர்ட் தனது மககள குயின்சிக்கு விருந்தும் வைத்துள்ளார்.இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் ராபர்ட் மாஸ்டர் இனி சந்தோசமா இருங்க என கூறி வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in