The Indian Times

கடலுக்கு மத்தியில் கணவன் கொடுத்த பிறந்தநாள் SURPRISE… தாங்க முடியாமல் நெகிழ்ந்துபோன சீரியல் நடிகை ரித்திகா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் ரித்திகா.இந்த நாடகத்தில் இவர் கதாநாயகன் கார்த்திக்கு தங்கையாக நடித்திருந்தார்.இவரின் உண்மையான பெயர் தமிழ் செல்வி.இந்த நாடகம் நல்ல வரவேற்பினை பெற்றது.இந்த நாடகத்தில் நடித்த இவருக்கு எதிர்பார்த்த வரவேற்ப்பு கிடைக்கவில்லை.இதனால் இந்த நாடகத்திற்கு பிறகு இவருக்கு அதிக சீரியல் வாய்ப்புகள்ஏதும் இல்லாமல் வாய்ப்பினை தேடி வந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதனால் நீண்ட நாட்களாக சின்னத்திரை எட்டி பார்க்காமல் இருந்தார் ரித்திகா.வாய்ப்பு தேடிய இவருக்கு தற்போது விஜய் தொலைக்காட்சியில் மீண்டும் வாய்ப்பு கிடைத்தது.அதன்படி தற்போது மாபெரும் விமர்சையாக சின்னத்திரை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் .இந்த கதாபாத்திரம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது .தனக்கு நடிப்பு மட்டுமில்லை தான் ஒரு பல திறமை உடைய நடிகை என்பதை இவர் அடிக்கடி நிரூபித்து வருகிறார்.முதல் கட்டமாக நடிப்பு இரண்டாவது சமையல் ,.அதன்படி முதலில் குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

தற்போது இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.விஜய் டிவியில் வேலை செய்து வரும் வினு என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார் ரித்திகா.இவர்களின் வரவேற்பு அண்மையில் சென்னையில் நடைபெற்றது.தற்போது கணவருடன் இவர் ஹனிமூனுக்கு மாலத்தீவு சென்றுள்ளார். அங்கு ரித்திகா தனது முதல் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.கணவர் அவருக்காக கடலுக்கு நடுவே பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.மேலும் ஹோட்டல் ஊழியர்களும் சுற்றிநின்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.இதனால் செய்வதறியாது நெகிழ்ந்துள்ளார்

Embed video credits : RITHIKA TAMILSELVI

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in