The Indian Times

வனிதாவால் கோபத்தின் உச்சிக்கே சென்ற ரம்யா கிருஷ்ணன்! BB JODIGAL PROMO

விஜய் டிவியின் நிகழ்ச்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு மிக பெரிய fan base இருக்கிறது என்று அனைவர்க்கும் தெரியும். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஹிந்தியில் மிக பிரபலமான நிகழ்ச்சியாக இருந்தது. தற்போது தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸிற்கும் மிக பெரிய ரசிகர் கூட்டம் இருக்கின்றது. இதுவரை தமிழில் 4 சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்த்துள்ளது. அதில் இறுதியாக நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டைகளுக்கு குறையே இல்லை என்றே கூறலாம்.

Advertisement

அந்தளவிற்கு சுவாரசியமும் , சண்டைகளும் அதிகமாகவே இருந்தது. பொதுவாகவே பிக் பாஸில் கலந்து கொண்ட ஒவ்வொரு பிரபலங்களுக்கும் அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அந்த பிரபலங்கள் அனைவரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனத்தில் தங்களின் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் பிக் பாஸ் பிரபலமான பாலாஜி , நிஷா , சோம், கேபி , ஆஜித், அனிதா , ஜித்தன் ரமேஷ் , சம்யுக்த என பல பிரபலங்கள் கலந்து கொண்டு கலக்கி வருகின்றனர்.

இந்நிலையில் பிக் பாஸ் வனிதா இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாக அதிர்ச்சி தகவலை கூறி வெளியேறினார். ஆனால் அதற்கு என்ன கரணம் என்று குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு தற்போது விடை தரும்படி ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது விஜய் டிவி. சென்ற வாரமே இந்த சண்டையை காட்டுவார்கள் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில் அந்த எபிசோட் இந்த வரும் வாரத்தில் ஒழிப்பரப்பாகும் என்று கூறப்பட்டது. தற்போது இந்த வார ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in