The Indian Times

Birthday party ல் கலந்துகொண்ட குக்கு வித் கோமாளி பிரபலங்கள்! சேட்டைகள் செய்த சிவாங்கி

விஜய் டிவியின் மிக பிரபலமான நிகழ்ச்சிகளுள் ஒன்று குக்கு வித் கோமாளி. சிறியவர் முதல் பெரியவர் வரை இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. இன்றைய இளைஞர்கள் ஸ்ட்ரெஸ் பஸ்ட்டர் என கூறும் அளவிற்கு இந்த நிகழ்ச்சி பட்டிதொட்டி எங்கும் பிரபலம். இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நபர்களும் செஃப் தாமுவும் ஒருவர். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பே பிரபலமாக தான் இருந்தார்.

Advertisement

ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இளைஞர்களுக்கும் செஃப் தாமுவை பிடிக்க ஆரம்பித்து விட்டது. இந்நிலையில் நேற்று செஃப் தாமு மகளின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அதில் குக்கு வித் கோமாளி பிரபலமான அஸ்வின், சிவாங்கி , பவித்ரா , சக்தி என அனைவரும் கலந்துகொண்டனர். அதில் குறிப்பாக சிவிங்கி செய்த சேட்டைகள் மற்றும் சிவாங்கி பாடல் பாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இவர் குக்கு வித் கோமாளி செட்டில் தன் அன்னான் புகழுடன் சேர்ந்து பயங்கரமாக சேட்டைகள் செய்வார் என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது குக்கு வித் கோமாளி ரசிகர்கள் குக்கு வித் கோமாளி 3 காக ஆவலாக காத்திருக்கும் நிலையில் தற்போது சிவாங்கியின் இந்த குறும்புத்தனமான வீடீயோவை பகிர்ந்து வருகின்றனர் ரசிகர்கள். Watch the video belowvideo embeded credits to Little talks youtube channel 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in