The Indian Times

ஏய் சித்ரா உன்னை தான்.. தோழி முன்னாள் சித்ரா என அழைத்ததால் கதிகலங்கிய கண்ணம்மா… பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் முக்கிய தொடர் பாரதி கண்ணம்மா.இந்த தொடருக்கு ஏகப்பட்ட குடும்ப தலைவிகள் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.காரணம் இந்த சீரியலின் கதை அந்தளவுக்கு ரசிகர்களை ஈர்த்துள்ளது.கணவனால் சந்தேகப்பட்டு குழந்தைகளுடன் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை அப்படியே தொடராக எடுத்து மக்களை கவர்ந்துள்ளதே இந்த பாரதி கண்ணம்மாவின் வெற்றிக்கு ரகசியம் என்று சொல்லலாம்.முதல் சீசன் முடிந்தது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியிருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

சீரியலின் முடிவு சில ரசிகர்களுக்கு சோகமாக இருந்தாலும் பலருக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது, தொடர் ரொம்ப இழுவையா இருக்கு சீக்கிரம் முடிங்க,எப்போ முடிப்பீங்க என கேள்வி மேல் கேள்வி கேட்டு வந்தனர் நெட்டிசன்கள் ,இந்நிலையில் இந்த தொடரின் முடிவு இவர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது,இருந்தும் மகிழ்ச்சியை நீண்ட நேரம் அனுபவிக்க விடாமல் விஜய் தொலைக்காட்சி பாரதி கண்ணம்மாவின் அடுத்த சீசன் ப்ரோமோவை கொடுத்து ரசிகர்களுக்கு பெரும் ஷாக் கொடுத்துள்ளது.தற்போது பாரதி கண்ணம்மா சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது.

உண்மையான கண்ணம்மா இறந்துவிடவே அவரது இடத்திற்கு சித்ரா வருகிறார்,கண்ணம்மாவாக வாழ தொடங்கும் சித்ரா அங்கு கண்ணம்மாவின் தோழியிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது சித்ரா என பெண் ஒருவர் அழைக்கவே கதிகலங்கியுள்ளார் சித்ரா.ஐயோ நம்ம மாட்டிவிடுவோமா என பதறியுள்ளார்,ஆனால் அந்த பெண் வேறு ஒருவரை அழைத்துள்ளார்,இதனால் சித்ரா நிம்மதி மூச்சு விடவே அவர் மீது சந்தேகப்படுகிறார் தோழி.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

https://youtu.be/zv3WLR1aKfQ

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in