The Indian Times

ராஜா ராணி 2 சீரியலில் இனி நான் இல்லை… சந்தியா வெளியிட்ட பகீர் வீடியோ.. ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி

நடிகை ஆல்யா மானசா சஞ்சீவ் நடிப்பில் வெளியாகிய ராஜா ராணி சீரியல் பெரும் வரவேற்பினை பெற்றது.இந்த நாடகத்திற்கு உடனடியாக சேர்ந்த ரசிகர்கள் கூட்டம் போல எந்த நாடகத்திற்கு இதுவரை இவ்வளவு கூட்டம் சேர்ந்தது இல்லை.இந்த நாடகத்திற்கு மக்கள் அளித்த ஆதரவையும் வெற்றியையும் தொடர்ந்து இந்த நாடகத்தின் இரண்டாம் பாகத்தினை தற்போது இயக்கி ஒளிபரப்பி வருகிறது விஜய் தொலைக்காட்சி.இந்த நாடகத்தில் ஆல்யாவும் சித்துவும் நடித்து வந்த நிலையில் ஆல்யா கர்ப்பமாகியதால் அவர் நாடகத்தினை விட்டு வெளியேறினார்.பின்னர் அவருக்கு பதில் ரியா விஸ்வநாதன் தற்போது நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தற்போது கதாநாயகியாக நடித்து வரும் ரியா சந்தியா கதாபாத்திரத்தில் மக்கள் மனதில் பதிந்துவிட்டார் என்று தான் கூற வேண்டும்.அந்தளவிற்கு தனது நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தார்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாகியுள்ளது. ஐபிஎஸ் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரியா அதற்கேற்ற முகபாவனைகள் மற்றும் தோற்றத்தில் அசத்தி வந்தார்.இந்நிலையில் அவர் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகுவதாக வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் ரியா விஸ்வநாதன்

வீடியோவில் இனி நான் ராஜா ராணி 2 சீரியலில் இல்லை ,வேறு ஒருவர் தான் இனி சந்தியாவாக நடிக்க உள்ளார்,அவருக்கு நீங்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.இது ரசிகர்களிடம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது,ரசிகர்கள் நீங்க போகாதீங்க என கூறி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in