The Indian Times

கார்த்தியின் கைதி படத்தின் ஹிந்தி REMAKE ஆன BHOLAA TEASER 2 வெளியாகியது…

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளியாகிய படம் கைதி.இப்படத்தில் கதாநாயகனாக கார்த்தி நடித்திருந்தார்.இப்படம் தீபாவளிக்கு தளபதி விஜயின் பிகில் படத்துடன் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது,மேலும் வசூலையும் அள்ளிக்குவித்தது.இப்படம் லோகேஷ் கனகராஜ் சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது என்று தான் கூற வேண்டும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இப்படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் வெளியாக இருக்கிறது.இதற்கு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.மேலும் இப்படத்தில் வில்லனாக நடிகர் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் இப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை நடிகர் அஜய் தேவ்கன் பெற்றார்.அவரே இப்படத்தினை இயக்கி தயாரித்து மேலும் கதாநாயகனாக நடித்தும் உள்ளார்.ஹிந்தியில் இப்படத்திற்கு போலா என பெயரிடப்பட்டுள்ளது.இப்படத்தில் இவருடன் தபு போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Advertisement

இப்படத்தின் முதல் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.தற்போது இப்படத்தின் இரண்டாவது டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.இப்படத்தின் டீசரை தமிழ் ரசிகர்கள் பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்,கைதி படத்தில் இருந்த எதார்த்தமான காட்சிகளையெல்லாம் இப்படத்தில் கூடுதலாக கிராபிக்ஸ் சேர்த்து படத்தையே சொதப்பி உள்ளதாக ரசிகர்கள் கேலி செய்தும் கிண்டல் செய்தும் மீம்ஸ்களை பறக்க விட்டு வருகின்றனர்.

Embed video credits : AJAY DEVGAN Ffilms

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in