The Indian Times

ஒருத்தன் வந்தா படை நடுங்கும்.. 11 நாட்களில் 250 கோடி வசூல் பெற்ற வாரிசு… தயாரிப்பு நிறுவனமே வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. தற்போது விஜய் படங்கள் என்றாலே அவை சரியாக ஓடாவிட்டாலும் பாக்ஸ் ஆபிசில் பல கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது வருகிறது. இதனால் இவர் படத்தினை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.அண்மையில் இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியது.இருப்பினும் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,அதே சமயம் வசூலிலும் எந்த சரிவும் இல்லை.

Advertisement

தற்போது விஜய் தெலுங்கு பக்கம் இறங்கியுள்ளார்.தெலுங்கு சினிமா இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தனது 66வது படமான வாரிசு படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா நடித்து வருகிறார்.மேலும் சரத்குமார் ,ஷியாம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இப்படம் கடந்த 11 ஆம் தேதி புதன்கிழமை பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Advertisement

தற்போது இப்படத்தின் வசூலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது தில் ராஜுவின் வெங்கடேஸ்வரா தயாரிப்பு நிறுவனம்.அதன்படி இப்படம் 11 நாட்களில் உலகம் முழுவதும் சுமார் 250கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.இதனால் தளபதி ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.மேலும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட இந்த அறிவிப்பு இணையத்தில் காட்டு தீ போல வேகமாக பரவி வருகிறது.

https://twitter.com/SVC_official/status/1617429232401141760?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1617429232401141760%7Ctwgr%5Ec688f9ba50fe221820f2514f7f6ff427ab3eb816%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fvarisu-crosses-250-cr-milestone-in-11-days-1674462423

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in