பாதுகாவலர்கள் இல்லாமல் விமான நிலையம் வந்து வரிசையில் காத்திருந்த தளபதி விஜய்

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. தற்போது விஜய் படங்கள் என்றாலே அவை சரியாக ஓடாவிட்டாலும் பாக்ஸ் ஆபிசில் பல கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது வருகிறது. இதனால் இவர் படத்தினை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.அண்மையில் இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியது.இருப்பினும் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,அதே சமயம் வசூலிலும் எந்த சரிவும் இல்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  காதலன் அமீர் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய பாவனி ரெட்டி

பாதுகாவலர்கள் இல்லாமல் விமான நிலையம் வந்து வரிசையில் காத்திருந்த தளபதி விஜய் 1

விளம்பரம்

தற்போது விஜய் தெலுங்கு பக்கம் இறங்கியுள்ளார்.தெலுங்கு சினிமா இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தனது 66வது படமான வாரிசு படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா நடித்து வருகிறார்.மேலும் சரத்குமார் ,ஷியாம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.பொங்கலுக்கு இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் படத்தினை பெருமளவு கொண்டாடி வருகின்றனர்.இப்படம் வெளியாகி11நாட்களில் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது

கட்டாயம் படிக்கவும்  என்ன மனுஷன்யா... குருதி தானம் செய்த நடிகர் சூர்யா

பாதுகாவலர்கள் இல்லாமல் விமான நிலையம் வந்து வரிசையில் காத்திருந்த தளபதி விஜய் 2

விளம்பரம்

இந்த படத்தின் வெற்றிகொண்டாட்டம் ஆனது ஹைதராபாத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகியது.இந்த நிகழ்ச்சியினை முடித்துக்கொண்டு தளபதி விஜய் மீண்டும் சென்னை திரும்ப ஹைதராபாத் விமான நிலையத்திற்கு எந்த வித பாதுகாப்புமின்றி தனியாக வந்து வரிசையில் நின்றுகொண்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விஜயின் இந்த எளிமையை ரசிகர்கள் பெருமளவு பாராட்டி வீடியோவை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  ஹைதராபாத் சென்றுள்ள சிறகடிக்க ஆசை கதாநாயகி மீனாவின் புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : Mana stars

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment