The Indian Times

என்னது பிரேம்ஜிக்கு கல்யாணம் ஆகிட்டா..? காட்டு தீ போல பரவிய பின்னணி பாடகி போட்ட பதிவு

பிரபல இயக்குனர் கங்கை அமரனின் மகன்கள் தான் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் பிரேம்ஜி.இதில் பிரேம்ஜிக்கு இன்று வரை திருமணம் ஆகவில்லை.திருமணத்தினை எதிர்பார்த்து தான் அவரும் காத்திருக்கிறார்.இவர் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமில்லாமல் இசையமைப்பாளராகவும் அசத்தி வருகிறார்.காமெடி,ஹீரோ என பல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

Advertisement

தமிழில் புன்னகை பூவே என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நடிகராக அறிமுகமாகினார்.அதன்பின்னரும் பல படங்கள் நடித்தும் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.சிம்பு நடித்த மன்மதன் படத்தில் நயன்தாராவிற்கு நண்பராக வந்து அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.அதனை தொடர்ந்து சென்னை 28,சத்தம் போடாதே என பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.2005 ஆம் ஆண்டு வெளியாகிய ஞாபகம் வருதே என்ற படத்தின் மூலம் இவர் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகினார்.அண்மையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகிய மன்மதலீலை படத்திற்கும் இவர்தான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இந்நிலையில் நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம் ஆகியுள்ளதாக இணையத்தில் தீ போல செய்தி பரவி வருகிறது.பின்னணி பாடகியான வினைதா பிரேம்ஜியை கட்டியணைத்து கொண்டு எனது புருஷனுடன் திரும்ப வேலை செய்ய போகிறேன் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார் மேலும் இந்த பதிவிற்கு என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் என பாடலையும் ஒலிக்க விட்டுள்ளார்.இதனால் இருவரும் திருமணம் செய்துகொண்டார்களா என பெரிய குழப்பம் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.அப்படி திருமணம் ஆகியிருந்தால் அதனை அவர்கள் அதிகாரபூர்வமாகவே அறிவித்திருப்பார்கள்,இது விளையாட்டாக செய்தது எனவும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in