The Indian Times

முதல் முறையாக பிக் பாஸ் 6 வீட்டுக்குள் சென்ற VIJAYTV பிரபலம்… யார் தெரியுமா?

தமிழில் 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து 6வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி அக்டொபர் மாதம் 9 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.100 நாட்கள் 14க்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டு போட்டிபோட்டு இறுதியில் வெல்பவருக்கு 50 லட்சம் பணமும் பிக் பாஸ் டைட்டிலும் வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி போன்ற மொழிகளிலும் அங்குள்ள நடிகர்களை வைத்து நடத்தப்பட்டு வருகிறது.தமிழில் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது

Advertisement

அண்மையில் 5வது சீசன் வெற்றிகரமாக முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல் இடத்தினை ராஜு ஜெயமோகன் பிடித்து டைட்டிலை தட்டி சென்றார் பிரியங்கா இரண்டாவது இடத்தினை பிடித்தார்.இதனை தொடர்நது பிக் பாஸ் 24 மணி நேரம் நேரலையிலும் பிக் பாஸ் அல்டிமேட் என வெளியாகியது.இதற்கும் மக்கள் நல்ல ஆதரவை அளித்தனர்.தற்போது வருகிற ஞாயிற்றுக்கிழமை அக்டொபர் 9ஆம் தேதி முதல் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

Advertisement

ரசிகர்கள் ஆவலுடன் இந்த நிகழ்ச்சிக்காக காத்து இருக்கின்றனர்.பலரும் இந்த முறை கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் யார் என்பதை தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளனர்.தற்போது பிக் பாஸ் வீட்டு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.விஜய் டிவி சூப்பர் சிங்கர் சாம் விஷால் முதல் முறையாக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார்.இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.தற்போது புகைப்படம் பெருமளவு வைரலாகி வருகிறது,

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in