பத்தாயிரம் கோடி ரூபாய் வசூல் செய்தும் இன்னும் தோல்வி நிலையில் இருக்கும் அவதார் 2

இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்த படம் அவதார்.இப்படத்திற்கு இன்று வரை பல ரசிகர்கள் கூட்டம் உள்ளது.அவதார் முதல் பாகத்திற்கு பிறகு இரண்டாவது பாகத்தினை எடுக்க இயக்குனர் ஜேம்ஸ் 2014 ஆம் ஆண்டு திட்டமிட்டார்.ஆனால் இறுதியாக 2018ல் தான் பட வேலைகளை தொடங்கினார்.இரண்டாம் பாகத்துடன் சேர்த்து 3ஆம் பாகத்தின் சில காட்சிகளையும் எடுத்துள்ளதாகவும்,பட்ஜெட் குறைவாகியுள்ள காரணத்தினால் 3ஆம் பாகத்தின் படப்பிடிப்பை நிறுத்திவைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.தற்போது சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகமான அவதார் – தி வாட்டர் ஆஃப் வே உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்ட ஷங்கர் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள்

பத்தாயிரம் கோடி ரூபாய் வசூல் செய்தும் இன்னும் தோல்வி நிலையில் இருக்கும் அவதார் 2 1

விளம்பரம்

இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது.ரசிகர்கள் தொடர்ந்து படத்தினை கண்டு களித்து வருகின்றனர்.பல திரையரங்குகள் தமிழகத்தில் ஹவுஸ்புல் காட்சிகளாக சென்று வருகிறது.படத்தில் விசுவல் காட்சிகள் நேரில் காண்பது போல அமைந்துள்ளதாக ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இப்படம் சுமார் 250 மில்லியன் டாலர் செலவில் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இப்படம் பத்தாயிரம் கோடி ரூபாய் வசூலை பெற்றும் தோல்வி நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  BIGGBOSS AISHU தங்கையுடன் போடும் குத்தாட்டம்...

பத்தாயிரம் கோடி ரூபாய் வசூல் செய்தும் இன்னும் தோல்வி நிலையில் இருக்கும் அவதார் 2 2

விளம்பரம்

இப்படம் 160 மொழிகளில் வெளியாகி உலகம் முழுவதும் சுமார் 1.6பில்லியன் வசூலை பெற்றுள்ளது.இந்திய மதிப்பின் படி இது ரூ. 13,164 கோடி ரூபாய் ஆகும்.இருந்தும் இப்படம் லாபம் பெறவில்லை தோல்வி நிலையில் தான் உள்ளதாக கூறப்படுகிறது.லாபத்திற்கு இன்னும் ரூ. 3300 கோடி வசூல் செய்ய வேண்டும் என தகவல்கள் வெளியாகியுள்ளது,இந்த வசூலை எடுத்து அவதார் படம் வெற்றிபெறுமா என பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகியுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment