The Indian Times

பாகுபலிக்கு இணையாக GRAPHICS-ல் பிரம்மாண்டமாக வெளியாகிய சமந்தாவின் சகுந்தலம் TRAILER இதோ

தமிழ் சினிமாவில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியாகிய விண்ணை தாண்டி வருவாயா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.பின்னர் தெலுங்கில் விண்ணை தாண்டி வருவாயா படத்தில் கதாநாயகியாக நடித்து தெலுங்கில் கால் தடம் பதித்தார்.இப்படம் பெரும் வரவேற்பினை தெலுங்கில் இவருக்கு பெற்றுக்கொடுத்தது.முதல் படத்திலேயே முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் நடிகை சமந்தா.இப்படத்தினை தொடர்ந்து தமிழில் பானா காத்தாடி படத்தில் கதாநாயகியாக நடித்து இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்டார்.இப்படத்தினை தொடர்ந்து தமிழுலும் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அண்மையில் புஷ்பா படத்தில் இவர் நடனம் ஆடிய ஊ சொல்றியா பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்து சமந்தாவின் புகழ் மேலும் ஓங்கியது.தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் நடிகை சமந்தா தற்போது பாலிவுட் பக்கம் செட்டில் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அண்மையில் இவர் இயக்குனர் முகுந்தன் இயக்கத்தில் நடித்திருந்த யசோதா படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்நிலையில் மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சமந்தா சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement

தற்போது இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் சகுந்தலம் படத்தில் சமந்தா கதாநாயகியாக நடித்துள்ளார்.இசையமைப்பாளர் மணிசர்மா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி வெளியாக உள்ளது.இப்படத்திற்கு சமந்தா ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்ற நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் படம் வெற்றிபெற ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : DIL RAJU

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in