தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக மக்களிடம் பிரபலமாகியவர் ஜனனி.இவர் ஸ்ரீலங்காவை பூர்விகமாக கொண்டவர் .மேலும் இலங்கையில் பிரபல சேனலில் தொகுப்பாளராக இருப்பவர்.பிக் பாஸ் நிகழ்ச்சி 6வது சீசனில் வாய்ப்பு வரவும் அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு நிகழ்ச்சியில் களம் இறங்கினார்.ஜனனி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது விளையாட்டை காண்பித்து மக்கள் மனதில் இடமும் பிடித்தார். பல போட்டியாளர்களை நேருக்கு நேர் சந்தித்து,பொம்மை டாஸ்க்,பேக்கரி டாஸ்கில் என எல்லா டாஸ்க்கிலும் பட்டையை கிளப்பினார் ஜனனி.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
வாராம் தோறும் இவர் நாமினேட் ஆகினாலும் மக்களால் காப்பாற்றப்பட்டு விடுவார்.இறுதி வரை இவர் வருவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் குறைவான வாக்குகளை பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.இது தமிழக ரசிகர்களுக்கும் ஸ்ரீலங்கா ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.ஜனனி வீட்டில் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட ரசிகர்களால் அதிகளவு ரசிக்கப்பட்டு ஷேர் செய்யப்பட்டு வருகிறது,தற்போது ஜனனி தளபதி விஜயின் 67வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர் சேலையில் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ இன்ஸ்டாகிராமில் மிகப்பெரிய அளவு ட்ரெண்ட் ஆகி வருகிறது.ரசிகர்கள் வீடியோவை பார்த்து ஜனனியா இது சேலையில் இவ்வளவு அழகா இருக்காங்க என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.வீடியோவில் கியூட்டாக வந்து சிரித்து வெட்கப்பட்டு ரசிகர்களை கொள்ளை கொண்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் சேலை உங்களுக்கு மிக அழகாக இருப்பதாக கூறி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.