The Indian Times

நம்ம BIGG BOSS ரித்விகாவுக்கு என்ன ஆச்சு ?இப்படி இருக்காங்க

பிக் பாஸ் சீசன் 2ல் வென்று அனைவரது மனத்தினையும் கொள்ளையடித்தவர் ரித்விகா.நடிப்பின் மேல் கொண்ட காதலால் பல போராட்டங்களுக்கு பிறகு வாய்ப்பு கிடைத்து சினிமாவுக்குள் நுழைகிறார்.அதன்படி 2013 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியாகிய பரதேசி படத்தில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.முதல் படத்திலேயே தனது நடிப்பினால் அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.இதனை தொடர்ந்து பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகிய மெட்ராஸ் படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு வரவே அதையும் மறுக்காமல் ஏற்றுக்கொண்டு அங்கும் சென்று அசத்தினார். அந்த சீசனில் வெற்றியும் பெற்று வெளியேறினார்.வெளியேறிய ரித்விகாவுக்கு பட வாய்ப்பு தொடர்ந்து வந்தது.தற்போது மேலும் சில படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் ரித்விகா.இப்படம் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.சிறந்த துணை நடிகையாக ரித்விகா சினிமாவை வளம் வந்து கொண்டிருக்கிறார்.தற்போது அமலாபால் நடிக்கும் காடவர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது

Advertisement

இப்படத்திற்காக ரித்விகா அசிட் அட்டாக் வாங்கியது போல மேக்கப் போட்டுள்ளார்.இந்த மேக்கப் போடும் வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் அடேங்கப்பா மேக்கப் உண்மையாகவே உள்ளது மாதிரி இருக்கே ,இத்தகைய கதாபாத்திரத்தினை ஏற்று நடிப்பதற்கு ரித்விகாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in