The Indian Times

கிராமத்து மொழியில் கிராமிய பாடலை பாடி அசத்திய BIGG BOSS தாமரை

நாடக கலைஞர் ஆன தாமரை செல்வி திருவிழாக்களில் நாடகம் நடித்து மிகவும் பிரபலம் ஆனவர் இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5ல் இவருக்கு வாய்ப்பு வரவே அதனை ஏற்றுக்கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கினார்.இந்த நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்களிடம் அறிமுகமாகினார்.பிக் பாஸ் போட்டிகளில் தனது தனித்திறமைகளை காண்பித்து மக்களை கவர்ந்தார் தாமரை.ஆனால் எதிர்பாராத விதமாக வாக்குகள் குறைவாக பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் வெற்றிபெற்றால் நாடக கலைஞர்கள் வெற்றிபெற்றது போல் அவர்களுக்காக தான் அவர் விளையாட வந்ததாகவும் நிகழ்ச்சியில் அடிக்கடி கூறுவார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தாமரைக்கு மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.இதன் மூலம் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் களம் இறங்கி புதிய போட்டியாளர்களிடம் மல்லு கட்டினார்.இங்கும் தனது சிறப்பான விளையாட்டினை காண்பித்து போட்டியாளர்களுக்கு நெருக்கடியை கொடுத்தார்.இவ்வாறு இரண்டு நிகழ்ச்சிகளிலும் தாமரை அடுத்தடுத்து கலந்துகொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகியுள்ளார்.தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஜோடிகள் எனும் நடன நிகழ்ச்சியில் தனது கணவருடன் இணைந்து நடனம் ஆடி அசத்தினார்

Advertisement

தற்போது தாமரை படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.படத்தில் நடிப்பது மட்டும் இன்றி பாடல்களை பாடுவதில் தற்போது களம் இறங்கி உள்ளார்.சுப்ரமணியபுரம் படத்திற்கு இசையமைத்து கண்கள் இரண்டால் பாடல் மூலம் பெரும் ஹிட் அடித்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இவரது இசையில் வீடு வந்து சேரலயே என்ற பாடலை பாடியிருந்தார்.அண்மையில் இப்பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.இந்நிலையில் தற்போது மீண்டும் கிராமிய பாடலை அழகாக பாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Embed video credits : LOTUS FAMILY

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in