The Indian Times

அட நம்ம மெட்டி ஒலி, நாதஸ்வரம் சீரியல் கோபியா இது ஆளே அடையாளம் தெரியாமல் ஆகிட்டாரே

1999 ஆம் ஆண்டு சன் டிவியில் அக்ஷயா என்ற நாடகத்தினை இயக்கி சின்னத்திரையில் இயக்குனர் ஆக களம் இறங்கினார்.பல சீரியல்களை இயக்கியும் இவருக்கான வரவேற்பு எதிலும் கிடைக்கவில்லை.இறுதியாக 2002 ஆம் ஆண்டு மெட்டி ஒலி என்ற குடும்ப சீரியலை இயக்கினார்,இந்த சீரியலை சன் டிவி ஒளிபரப்பு செய்தது.இந்த சீரியல் மாபெரும் ஹிட் அடித்தது.இவரை தற்போது வரை அனைவரும் கோபி என்றுதான் அழைத்து வருகிறார்கள்.அந்த அளவிற்கு கோபி என்கிற கதாபாத்திரத்தில் ஒன்றிவிட்டார் திருமுருகன்.

Advertisement

இவர் சின்னத்திரையில் மட்டும் இல்லாமல் வெள்ளித்திரையில் நடிகர் பரத் வைத்து எம்டன் மகன் மற்றும் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தினையும் இயக்கின் வெள்ளித்திரையில் இயக்குனராக அறிமுகம் ஆகினார்.இதில் எம்டன் மகன் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடதக்கது.இதனை தொடர்ந்து பல வெற்றிகரமான சீரியல் தொடர்களை அளிக்க தொடங்கி மக்களின் வரவேற்பினை பெற்றார்.இவருக்கென பெரும் குடும்ப தலைவிகளின் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

Advertisement

இவர் இறுதியாக கல்யாண வீடு என்ற சீரியலை 2018 ஆம் ஆண்டு இயக்கி 2002 ஆம் ஆண்டு முடித்துவிட்டார்.மேலும் இதற்கு பிறகு சில நாட்கள் ஓய்வெடுக்க இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.இந்நிலையில் தற்போது மீண்டும் சீரியலை கையிலெடுத்துள்ளார் திருமுருகன்.இதற்கான படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இவர் அறிமுகபடுத்திய போஸ் வெங்கட் தற்போது நடிகர் விமலை வைத்து படம் இயக்கி வருகிறார்,அந்த ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தற்போது கோபி சென்று பார்த்துள்ளார்.அங்கு எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.போட்டோவில் கோபி ஆளே அடையாளம் தெரியாமல் ஆகியுள்ளார்.ரசிகர்கள் கோபியை ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in