The Indian Times

தளபதியுடன் “ரஞ்சிதமே” பாடல் பாட தயாராகிய பாடகி மானசி… வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி

தெலுங்கு படத்தில் பாடல் பாடி 2013 ஆம் ஆண்டு பாடகியாக சினிமாவுக்குள் நுழைந்தவர் மானசி.தமிழில் இவர் ஜிவி பிரகாஷ் இசையில் வெளியாகிய அன்னக்கொடி படத்தில் போறாளே என்ற பாடலை பாடி தமிழில் கால்தடம் பதித்தார்.தெலுங்கு மட்டுமில்லாமல் தமிழ்,மலையாளம்,கன்னடம் போன்ற மொழி சினிமாவிலும் பல பாடல்களை பாடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் பாடல் பாடியுள்ளார்.இவரின் குரலுக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாரிசு.இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் ரஞ்சிதமே என்ற பாடலை மானசி தளபதி விஜயுடன் இணைந்து பாடியுள்ளார்.

Advertisement

இப்பாடலுக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது,பாடலில் ஆடிய ராஷ்மிக்காவை விட அதிக கவனம் ஈர்த்தவர் மானசி தான் என்று கூறினால் மிகையாகாது.பாடல் படப்பிடிப்பிற்கு மானசி கிளம்பிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in