The Indian Times

பேட்டியின் நடுவே ரசிகர்கள் சத்தத்தால் பயங்கர காண்டாகிய கமல்ஹாசன்.. அதிக சத்தத்தால் பேச முடியாமல் தவிப்பு

அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என சிறுவனாக சினிமாவில் தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர் கமல்ஹாசன். சிறுவனாக வந்து இன்று உலகநாயகன் என ஒரு சகாப்தத்தையே உருவாக்கியுள்ளார்.களத்தூர் கண்ணம்மா முதல் விக்ரம் வரை படங்களுக்கு படம் நடிப்பையும்,கேரக்டர்களையும் மாற்றி மாற்றி புதிய சாதனையை தமிழ் சினிமாவில் உருவாக்கியுள்ளவர் இவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

படத்தில் ஏற்கும் கதாபாத்திரமாகவே மாறி நடிப்பது தான் உலகநாயகன் வழக்கம்.அன்று முதல் இன்று வரை குறையாத ரசிகர்கள் கூட்டத்தினை கொண்டுள்ளார் இவர்.அண்மையில் சில வருடங்களாக நடிக்காமல் இருந்த கமல்ஹாசன் விக்ரம் படத்தில் மீண்டும் நடித்து தமிழ் சினிமாவையே வசூலில் ஆட்டம் காணவிட்டார்.இப்படத்திற்கு பிறகு இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

இந்தியன் 2 படப்பிடிப்பினை தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் 35 ஆண்டுகள் கழித்து மீண்டும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.இதனை படக்குழு கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு அறிவித்திருந்தது.இதனை தொடர்ந்து தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.தனது பிறந்தநாளை முன்னிட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கமல்ஹாசன் பேசும்பொழுது அங்கு கூடியிருந்த ரசிகர்கள் சத்தம் எழுப்பியதால் பேட்டியின் நடுவே கோபமாகியுள்ளார் கமல்ஹாசன்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Embed video credits : THI CINEMAS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in