The Indian Times

பிறந்தநாள் விழாவில் அக்ஷராஹாசன் உடன் நடனமாடி பட்டையை கிளப்பிய கமல்

சிறுவனாக சினிமாவில் தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர் கமல்ஹாசன். சிறுவனாக வந்து இன்று உலகநாயகன் என ஒரு சகாப்தத்தையே உருவாக்கியுள்ளார்.களத்தூர் கண்ணம்மா முதல் விக்ரம் வரை படங்களுக்கு படம் நடிப்பையும்,கேரக்டர்களையும் மாற்றி மாற்றி புதிய சாதனையை தமிழ் சினிமாவில் உருவாக்கியுள்ளவர் இவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

படத்தில் ஏற்கும் கதாபாத்திரமாகவே மாறி நடிப்பது தான் உலகநாயகன் வழக்கம்.அன்று முதல் இன்று வரை குறையாத ரசிகர்கள் கூட்டத்தினை கொண்டுள்ளார் இவர்.அண்மையில் சில வருடங்களாக நடிக்காமல் இருந்த கமல்ஹாசன் விக்ரம் படத்தில் மீண்டும் நடித்து தமிழ் சினிமாவையே வசூலில் ஆட்டம் காணவிட்டார்.இப்படத்திற்கு பிறகு இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

இந்தியன் 2 படப்பிடிப்பினை தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் 35 ஆண்டுகள் கழித்து மீண்டும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.இதனை படக்குழு கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு அறிவித்திருந்தது.இவர் நேற்று தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடியுள்ளார்.பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மகள் அக்ஷராஹாசன் உடன் இணைந்து குத்தாட்டம் போட்டு மகிழ்ந்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Embed video credits : Tamil Mithran

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in