The Indian Times

வாத்தி படத்தின் FIRST SINGLE பாடலை ஜிவி இசையில் பாடிய தனுஷ்

துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார் தனுஷ்.இதற்கு இவரது விடா முயற்சியும் கடின உழைப்பே காரணம்.ஆரம்பத்தில் பல எதிர்மறை விமர்சனங்கள் கேலிகள் அனைத்தையும் பெற்று தன்னை தானே செதுக்கி இன்று இந்த அளவிற்கு உயர்ந்துள்ளார்.பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார் தனுஷ்.இவர் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்த 3 படம் இவருக்கு சினிமாவில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இப்படத்தில் இவர் பாடிய ஒய் திஸ் கொலைவெறிடி என்ற பாடல் மிக பெரிய அளவு பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து இவர் உலகம் முழுவதும் மிக பிரபலமாகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இப்பாடலின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் சினிமாவில் கொடிகட்டி பறக்க தொடங்கினார்.தமிழில் இருந்து ஹிந்திக்கு சென்ற நடிகர்கள் சிலர் அதில் இவரும் ஒருவர்.அமிதாப்பச்சன் உடன் நடிக்கும் அளவிற்கு நடிகர் தனுஷ் உயர்ந்துள்ளார் மேலும் பாலிவுட்டில் இருந்து தற்போது ஹாலிவுட்டிற்கு சென்று அங்கேயும் கலக்கு கலக்கி வருகிறார் தனுஷ் ,அவெஞ்சர்ஸ் பட இயக்குனர் இயக்கத்தில் இவர் நடித்த க்ரே மேன் மற்றும் சன் பிக்சர் தயாரிப்பில் இயக்குனர் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம்வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது

Advertisement

தற்போது நடிகர் தனுஷ் இயக்குனர் வெங்கி இயக்கத்தில் சார் படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் தமிழில் வாத்தி என வெளியாக உள்ளது.முதல் முறையாக தனுஷ் நடிப்பில் இரண்டு மொழிகளில் உருவாகும் படம் இது ஆகும்.சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் நாகவம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோர் இப்படத்தினை இணைந்து தயாரித்து வருகின்றனர்.மேலும் இப்படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார்.மேலும் இப்படத்தில் தோட்டப்பள்ளி மது.சமுத்திரக்கனி,நரேன்,என பலரும் நடித்துள்ளனர்.ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார் அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது இப்படம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.வரும் 10 ஆம் தேதி இப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.தற்போது இப்பாடலின் சில வரிகளை தனுஷ் பாட ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ஜிவி.வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ள வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in