பைக் எடுத்துக்கொண்டு பறக்கும் தனுஷ்..CAPTAIN MILLER படத்தின் TITLE TEASER இதோ!!

இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இரண்டாவது மகன் தனுஷ்.துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார்.இதற்கு இவரது கடின உழைப்பே காரணம்.பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார் தனுஷ்.இவர் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்த 3 படம் இவருக்கு சினிமாவில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இப்படத்தில் இவர் பாடிய ஒய் திஸ் கொலைவெறிடி என்ற பாடல் மிக பெரிய அளவு பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து இவர் உலகம் முழுவதும் மிக பிரபலமாகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குத்தாட்டம் போடும் தமன்னா மற்றும் ராஷிகண்ணா.. அரண்மனை4 VIDEO SONG வெளியாகியது

பைக் எடுத்துக்கொண்டு பறக்கும் தனுஷ்..CAPTAIN MILLER படத்தின் TITLE TEASER இதோ!! 1

விளம்பரம்

தமிழில் இருந்து ஹிந்திக்கு சென்ற நடிகர்கள் சிலர் அதில் இவரும் ஒருவர்.அமிதாப்பச்சன் உடன் நடிக்கும் அளவிற்கு நடிகர் தனுஷ் இன்று உயர்ந்துள்ளார்.தற்போது ஹாலிவுட் வரை நடிகர் தனுஷ் கொடி பறக்கிறது. இவர் நடித்துள்ள க்ரே மேன் என்ற ஹாலிவுட் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.இந்நிலையில் தனுஷ் தெலுங்கிலும் நேரடியாக கால்தடத்தினை பதிக்க உள்ளார்.இயக்குனர் வெங்கி இயக்கத்தில் தனுஷ் சார் படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் தமிழில் வாத்தி என வெளியாக உள்ளது.அதே சமயம் இயக்குனர் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்,சன் பிக்சர் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.அடுத்த மாதம் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் அமித்சரஸ் பொற்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை ரம்யா பாண்டியன்

பைக் எடுத்துக்கொண்டு பறக்கும் தனுஷ்..CAPTAIN MILLER படத்தின் TITLE TEASER இதோ!! 2

விளம்பரம்

தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க உள்ளார்.இப்படத்தினை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க உள்ளது.இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.மாறன் படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷ் உடன் இணைய உள்ளது சத்யஜோதி நிறுவனம் ஆகும்.இப்படத்தின் டைட்டில் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது,இப்படம் 2023 ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வர உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.இந்த டைட்டில் டீசரை பார்க்கும் பொழுது நிச்சயம் இது வழக்கமான தனுஷ் படம் போல இருக்காது என என்பது தெரிகிறது

கட்டாயம் படிக்கவும்  குலதெய்வம் கோவிலில் வழிபட்ட நடிகை ஆத்மீகா

விளம்பரம்

Embed video credits : sathyajothi films

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment