The Indian Times

ஜெய் பீம் எனது கதை..நடிகர் சூர்யா மீது பரபரப்பு புகார்

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா,ரஜிஷா விஜயன்,பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்த திரைப்படம் ஜெய் பீம்.இப்படம் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அமேசான் ஓடிடி தளத்தில் படம் வெளியாகியது.இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தினை அளித்தாலும் படத்தின் கதை அவர்களை ஏமாற்றவில்லை.உண்மை சம்பவத்தின் அடிப்படையை மையக்கருவாக கொண்டு தயாரிப்பாளர் படத்தினை வடிவமைத்துள்ளார்.இப்படம் சூர்யா ரசிகர்கள் மட்டுமில்லாமல் சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படத்தினை பார்த்த பலரும் இயக்குனரை புகழ்ந்தும் பாராட்டியும் தள்ளினர் மேலும் இப்படத்தில் பெரிய ஹீரோ சூர்யா நடித்ததினால் தான் இப்படியெல்லாம் நடந்துள்ளது என்பதே தெரிகிறது என நடிகர் சூர்யாவும் பாராட்டு மழையில் நனைத்தனர்.

Advertisement

தற்போது இப்படம் புதிய சிக்கலில் சிக்கியுள்ளது.இப்படத்தின் கதை தன்னுடையது மேலும் இது எனது வாழ்வில் நடந்த கதை என கூறி குளஞ்சியப்பன் என்பவர் புகார் அளித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது,ஜெய் பீம் படத்தில் வந்த கதை எனது வாழ்க்கையில் நடந்தது,இதனை நான் படமாக எடுக்க திட்டமிட்டிருந்தேன்,ஆனால் அதற்குள் அதனை திருடி ஜெய் பீம் எடுத்துவிட்டார்கள்,இதனால் முதலில் நடிகர் சூர்யா,இயக்குநர் ஞானவேல்ராஜா மற்றும் அமேசான் நிறுவனத்தினர் மீது சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தோம் நாங்கள் கொடுத்த புகாருக்கு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை

Advertisement

எனவே தற்போது சைதாப்பேட்டையில் உள்ள மாநகர நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார் மேலும் நீதிமன்றத்தில் அளித்த மனுவில் அவர் கூறியதாவது,இந்த புகாரை முழுமையாக விசாரணை செய்து காப்புரிமை,மற்றும் அறிவு சொத்துரிமை கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என அறிவித்துள்ளார்.இந்த மனு வருகிற ஜூலை 15 ஆம் தேதி நடக்க உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in