என்ன DIRECTOR மொட்டை அடிச்சிட்டீங்க எனக்கு…பிரபுதேவா

தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பல பன்முக திறமை கொண்டவர் பிரபு தேவா.இவர் கால் தடம் பதித்த அணைத்து துறைகளிலும் கலக்கினார்.தமிழ் சினிமாவில் இவர் இந்து என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு ஆனது கிடைக்கவில்லை ,இப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இவர் நடித்த காதலன் திரைப்படம் பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றது.இப்படத்தின் ,மூலம் பிரபு தேவா அனைவராலும் அறியப்பட்டவர் ஆகினார்.தனது நடனத்தினால் பலரையும் இவரது ரசிகர் ஆக்கினார் பிரபு தேவா.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அமீர் மாமா வாங்க போட்டோ எடுக்கலாம்..கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்த பாவனி ரெட்டி

என்ன DIRECTOR மொட்டை அடிச்சிட்டீங்க எனக்கு...பிரபுதேவா 1

விளம்பரம்

பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார்.மேலும் தெலுங்கு படத்தினை இயக்கி இயக்குனராகவும் மாறினார்.தமிழில் இவர் நடிகர் விஜயை வைத்து இயக்கிய போக்கிரி படம் மாபெரும் வரவேற்பினை பெற்றது.இதன்மூலம் இயக்குனர் ஆகவும் தமிழக மக்களின் மனதில் நீங்காத இடத்தினை பிடித்தார்.இப்படத்தினை தொடர்ந்து பல படங்களை இயக்கியுள்ளார் பிரபு தேவா.இவர் தமிழில் மட்டும் இல்லாமல் ஹிந்தியிலும் இயக்குனராக அசத்தியவர்.கடந்த ஆண்டு சல்மான் கானை வைத்து ராதே என்ற படத்தினை இயக்கி இருந்தார்.இப்படம் ஹிந்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டில் கடலுக்கடியில் எதிர்நீச்சல் சீரியல் நந்தினி கொண்டாட்டம்

என்ன DIRECTOR மொட்டை அடிச்சிட்டீங்க எனக்கு...பிரபுதேவா 2

விளம்பரம்

தற்போது இயக்கம் ஒரு பக்கம் இருக்க நடிப்பிலும் களம் இறங்கி அசத்தி வருகிறார்.தற்போது 6 படங்களை கைவசம் வைத்துள்ளார் பிரபுதேவா.இதில் இயக்குனர் ராகவன் இயக்கத்தில் மை டியர் பூதம் படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு இமான் இசையமைக்க உள்ளார்.இப்படத்தில் பிரபுதேவா பூதமாக நடித்துள்ளார்.இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படத்திற்காக இவர் மொட்டை அடித்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் படத்திற்காக இவ்வளவு மெனக்கடல் செய்யும் பிரபுதேவாவை பாராட்டி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  தங்கசிலை போல மின்னும் நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits :  INDIAGLITZ 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment