PLEASE..மீனாவின் கணவர் பத்தி தப்பா பேசாதீங்க-அவரு இறந்த காரணம் இதுதான் முதல் முறையாக காரணத்தினை உடைத்த கலா மாஸ்டர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கலக்கியவர் மீனா.இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.தமிழில் இவருக்கு என் ராசாவின் மனசிலே படம் மாபெரும் வெற்றியையும் வரவேற்பினையும் பெற்றுத்தந்தது.குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகி,குணசித்திர நடிகை என சினிமாவை ஒரு கலக்கு கலக்கி வருபவர் மீனா.இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்பவருக்கும் 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது.இவர் தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்து அசத்தினார்.மேலும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற படத்திலும் நடித்துள்ளார்.அம்மாவை போலவே குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்குள் அறிமுகமாகி அசத்திவிட்டார்.

PLEASE..மீனாவின் கணவர் பத்தி தப்பா பேசாதீங்க-அவரு இறந்த காரணம் இதுதான் முதல் முறையாக காரணத்தினை உடைத்த கலா மாஸ்டர் 1

விளம்பரம்

.மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவே அவருக்கு சென்னை ஆழ்வார்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.மேலும் அவருக்கு நுரையீரல் பாதிப்பும் இருந்துள்ளதால் சிகிச்சை பலனளிக்காமல் சில நாட்கள் முன்பு இயற்கை எய்தினார்.இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ரசிகர்களுக்கும் திரை உலகிற்கும் அளித்தது.மீனா கணவர் வித்யாசாகர் உடலுக்கு பல சினிமா நடிகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.மீனாவின் நெருங்கிய தோழியான கலா மாஸ்டர் இறுதி வரை மீனாவின் கூட இருந்து அனைத்து காரியங்களையும் செய்தார்.இவரின் இத்தகைய செயலுக்கு தமிழக மக்கள் பெரும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.தோழி என்றால் கட்டான கட்டத்தில் விட்டுக்கொடுக்க கூடாது கலா மாஸ்டர் போல் தான் இருக்க வேண்டும் என பலரும் தெரிவித்தனர்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் 50வது படத்தின் FIRST LOOK போஸ்டர் வெளியாகியது

PLEASE..மீனாவின் கணவர் பத்தி தப்பா பேசாதீங்க-அவரு இறந்த காரணம் இதுதான் முதல் முறையாக காரணத்தினை உடைத்த கலா மாஸ்டர் 2

விளம்பரம்

மீனாவின் கணவர் இறந்தது குறித்து அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது,இந்த வயசுல மீனாவுக்கு இப்படி நடந்து இருக்கிறது யாராலயும் ஜீரணிக்க முடியாத விஷயம்.,நானும் மீனாவின் 35 வருஷம் பழக்கம்,அவரின் கணவர் எனக்கு மிகுந்த நெருக்கம் என்னை அக்கா அக்கா என்று தான் கூறிக்கொண்டே வருவார் ,அவளுடைய ஒவ்வொரு கஷ்டத்திலும் மீனாவுடன் நான் கூட இருந்திருக்கேன்,எனக்கு முன்னே தெரியும் அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்,நானும் மீனாவும் தான் ஓடிக்கொன்டே அவரை பாத்துகிட்டு இருந்தோம்.வாழ்க்கையில் நாம் இந்த மாதிரி விஷயத்துல தான் கூட இருக்கனும்,மீனா ரொம்ப பாவம் அவருக்கு 10வயசுல குழந்தை இருக்கு.மூணு மாசமா அவரது கணவரை மருத்துவமனையில் வைத்து பத்திரமாக பார்த்துக்கொண்டார்.ரெண்டுநாட்கள் முன்னாள் வரை வித்யாசாகர் நல்லாத்தான் இருந்தார் திடீரென இப்படி ஆகிவிட்டது.மீனாவின் முகத்தில் சிரிப்பை பார்த்துவிட்டு,அவரது கண்ணில் கண்ணீரை பார்க்க முடியவில்லை.

கட்டாயம் படிக்கவும்  துபாயை கலக்கும் குக் வித் கோமாளி மணிமேகலை

PLEASE..மீனாவின் கணவர் பத்தி தப்பா பேசாதீங்க-அவரு இறந்த காரணம் இதுதான் முதல் முறையாக காரணத்தினை உடைத்த கலா மாஸ்டர் 3

விளம்பரம்

வித்யாசாகருக்கு கொரோனா ஜனவரி வந்தது பின்னர் சரியாகத்தான் இருந்தார். கொரோனா பாதிப்பு பின் அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது.ஏப்ரல்,மே,ஜூன் மூன்று மாதங்களில் அவர் மருத்துவமனையில் தான் இருந்தார்.நுரையீரல் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால்,நுரையீரல் மாற்ற முடிவெடுத்து தேடினோம் ஆனால் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார் மேலும் தமிழக அரசு பெரும் உதவியாக இருந்தது.வித்தியாசகர் மாறி ஒரு நல்ல மனிதரை பார்க்க முடியாது,அனைவரையும் சரி சமமாக நடத்துபவர்,அவர் ஐடியில் வேலை செய்பவர் அதனால் மீடியா பக்கம் வரமாட்டார்.வித்யாசாகர் ரொம்ப ஜாலியான மனிதர்,என்னையெல்லாம் ரொம்ப கேலி செய்வார்.இவருக்கு கடவுள் இப்படி செய்வர் என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.மீனாவின் நிலைமை விரோதிக்கு கூட வரக்கூடாது.நைனிகா ஏதும் சாப்பிடவில்லை,அமைதியாக இருந்தால் ,பின்னர் தந்தைக்கு இறுதி சடங்கு செய்தால் இது ரொம்ப வேதனை அளிக்கிறது.நாங்க இருக்கோம் மீனாவுக்கு ,விட்டுக்கொடுக்க மாட்டேன்,மீனாவுக்கா எல்லாரும் வேண்டிக்கோங்க மீனா நல்லா இருக்கணும்னு அதான் என்னுடைய ஆசை என தெரிவித்துள்ளார்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

0 thoughts on “PLEASE..மீனாவின் கணவர் பத்தி தப்பா பேசாதீங்க-அவரு இறந்த காரணம் இதுதான் முதல் முறையாக காரணத்தினை உடைத்த கலா மாஸ்டர்”

Leave a Comment