The Indian Times

TAMILROCKERS-ஐ கூண்டோடு பிடிக்கும் அருண் விஜய் – TAMILROCKERS TEASER

பிரபல பழம்பெரும் நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதியரின் மகன் அருண் விஜய்.தாய் தந்தை போல சினிமாவில் எதாவது சாதிக்க வேண்டும் என 1995 ஆம் ஆண்டு முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் களம் இறங்கினார்.இதை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து வந்தாலும் எதிர்பார்த்த வரவேற்பு இவருக்கு சினிமாவில் கிடைக்கவில்லை.இருப்பினும் சினிமாவில் தொடர்ந்து முயற்சி செய்து வந்தார்.இறுதியாக இவரின் முயற்சிக்கு பலனாக கவுதம் மேனன் கதையில் நடிக்க ஒப்புக்கொண்டார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு ஏதுவாக இவருக்கு என்னை அறிந்தால் படத்தில் அஜித்குமாருக்கு வில்லன் ஆக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி படத்தில் நடித்து அனைவரையும் நடிப்பில் மிரட்டிவிட்டார்.இந்த படத்தில் அருண் விஜய்க்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து இவரும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர் என்ற அந்தஸ்தினை பிடித்தார்.அதனை தொடர்ந்து நல்ல கதைகளை கேட்டு தொடர்ந்து நடித்து வருகிறார்.தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் யானை படத்தில் நடித்துள்ளார்.இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.இப்படத்தின் வெற்றியை தற்போது ஹரி மற்றும் அருண் விஜய் ஆகியோர் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement

இப்படத்திற்கு பிறகு வரிசையாக நிறைய படங்களை கைவசம் வைத்துள்ளார் அருண்விஜய்.தற்போது இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் தமிழ் ராக்கர்ஸ் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக வாணி போஜன் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் நேரிடையாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக உள்ளது.தற்போது இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.யானையில் தென் மாவட்டகாரனாக கலக்கிய அருண் விஜய் இந்த படத்தில் முற்றிலும் அமைதியான கதாபாத்திரமாக நடித்து அசத்தியுள்ளார் டிசர் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Embed video credits: SONYLIV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in