The Indian Times

BIKE RIDE-ன் பொழுது எளிமையாக ரோட்டுக்கடையில் அமர்ந்து சாப்பிட்ட நடிகர் அஜித்

நடிகர் அஜித்குமாருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களது ரசிகர்களுக்கு திருவிழா ,தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்தளவிற்கு அஜித் மேல் தீராத அன்பு கொண்டவர்களாக உள்ளனர் இவர்கள் ரசிகர்கள் .அண்மையில் இவரின் நடிப்பில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது .வசூலிலும் சாதனை படைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.தற்போது அஜித் மீண்டும் இயக்குனர் வினோத் இயக்கத்தில்,போனிகபூர் தயாரிப்பில் மூன்றாவது முறையாக புதிய படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பிசியாக நடைபெற்று வருகிறது.

Advertisement

வலிமை படத்தில் இவரது உடல் பருமன் குறித்து பலரும் கேலி செய்து வந்தனர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதுபோல் தல அஜித் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.நடிகர் அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவருக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.தனது குடும்பத்துடன் தல அஜித் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.தற்போது துணிவு படத்தில் நடித்து முடித்துள்ளார் அஜித்,இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

Advertisement

அடிக்கடி பைக் ரைடு செய்து வரும் அஜித் தற்போது அஜித் துணிவு படப்பிடிப்பினை முடித்துவிட்டு மீண்டும் பைக் ரைடு செய்ய தொடங்கியுள்ளார்.இந்த பைக் ரைடின் பொழுது எளிமையாக தல அஜித் ரோட்டுக்கடைக்கு சென்று சாப்பிட்டுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது. அஜித் ரசிகர்கள் புகைப்படத்தினை இணையத்தில் ஷேர் செய்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.மேலும் நடிகர் அஜித்குமாரின் எளிமையை பெருமளவு ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in