The Indian Times

லேடி ஜாக்கிசானை போல அதிரடியில் அலறவிடும் த்ரிஷாவின் “ராங்கி” TRAILER இதோ…

நடிகை திரிஷா ஜோடி படத்தின் மூலம் 1999ஆம் ஆண்டு சினிமாவிற்குள் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகியவர்.ஆரம்பத்தில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் சாமி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆகினார்.இந்த படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இந்த படத்தின் மூலம் பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்று,முதல் படத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தினை பெற்றார்.தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளை அடித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.தமிழில் இவர் அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து விட்டார்.மேலும் கதாநாயகியாக மட்டுமில்லாமல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்திலும் நடித்தார்.ஆனால் இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை பெற்று தரவில்லை என்றாலும் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 23 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஒரே நடிகை இவர் தான்.தற்போது இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது

Advertisement

தற்போது இவர் இயக்குனர் சரவணன் இயக்கத்தில் இயக்குனர் முருகதாஸ் கதையில் ராங்கி படத்தில் நடித்துள்ளார்.சி சத்யா படத்திற்கு இசையமைத்துள்ளார்.லைகா நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளார்.இப்படத்தின் ட்ரைலரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.ட்ரைலரில் நடிகை த்ரிஷா இதுவரை இல்லாத அளவிற்கு அதிரடி காட்டி மிரட்டியுள்ளார்.இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.ரசிகர்கள் இப்படம் வெற்றியடைய தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.இப்படம் வருகிற டிசம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது

Embed video credits : SUNTV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in