The Indian Times

சற்றும் எதிர்பாராத அளவு குறைந்த வசூலை முதல் நாளே பெற்ற விஷாலின் லத்தி

நடிகர் விஷால் செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர்.முதல் படமே மாபெரும் ஹிட்.இதன்மூலம் தமிழ் சினிமாவில் நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார்.இப்படத்தினை தொடர்ந்து சண்டக்கோழி,திமிரு என வரிசையாக வெற்றிப்படங்களை இறக்கினர்.அறிமுகம் ஆகி முதல் மூன்று படங்களையும் ஹிட் கொடுத்த ஒரே நடிகர் விஷால்.இதன் மூலம் இவர் முன்னணி நடிக ர் என அந்தஸ்தினை தமிழ் சினிமாவில் பெற்றார்.மேலும் தனக்காக ரசிகர்கள் கூட்டத்தினையும் சேர்த்துக்கொண்டார் விஷால்.தொடர்ந்து தமிழில் படங்கள் நடிக்க தொடங்கினார்.தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் படங்கள் நடிக்க தொடங்கி நல்ல வரவேற்பினை பெற்றார் விஷால்.

Advertisement

நடிகராக மட்டுமில்லாமல் அடுத்தகட்டமாக தயாரிப்பாளராகவும் களம் இறங்கி அதிலும் வெற்றி பெற்று வருகிறார்.மலையாளத்தில் வில்லன் படத்தில் மோகன் லாலுக்கு வில்லனாக நடித்து அசத்தினார்.தற்போது தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய வீரமே வாகை சூடும் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் இயக்குனராக அவதாரம் எடுத்து மிஸ்கின் இயக்கத்தில் வெளியாகிய துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தினையும் இயக்கியுள்ளார்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.விஷாலின் இயக்கத்தினை காண அனைவரும் ஆவலாக உள்ளனர்.

Advertisement

தற்போது விஷால் இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் நடித்த லத்தி படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.படத்தின் ட்ரைலர் அதிகரித்த எதிர்பார்ப்பினை படம் பூர்த்தி செய்யவில்லை என்று ரசிகர்கள் படம் பார்த்து தங்களது கருத்துக்களை கூறி வந்தனர்.தற்போது இப்படம் நேற்று முதல் நாள் மட்டும் ரூ.2கோடிக்கு குறைவான வசூலை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது,இருப்பினும் இது குறைந்த அளவு வசூல் என்பதால் விஷால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in