The Indian Times

விஜய் சேதுபதியாக மீண்டும் வந்த புகழ் | Cook With Comali New Promo

தமிழில் இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்து உள்ளது குக் வித் கோமாளி நிகழ்ச்சி.இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக அதிர்ச்சி அருண் மற்றும் பரத் ஆகிய இரண்டு பேர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.கோமாளியாக வந்து பிரபலங்கள் செய்யும் கலாட்டா காண்பவர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க செய்கிறது.

Advertisement

இந்த நிகழ்ச்சியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து வருகின்றனர்.இந்த முறை இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பல பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில் அதில் மூவர் வெளியாகி தற்போது அம்மு அபிராமி,கிரேஸ் கருணாஸ்,தர்ஷன்,ஸ்ருத்திகா,ரோஷினி, வித்யூலேகா,இந்நிலையில் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் மற்றும் சுட்டி அரவிந்த் களம் இறங்கியுள்ளனர்.இதனால் இவர்களுக்கிடையே போட்டி அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த வார சீசன் புதிய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.இந்த முறை கோமாளிகள் தமிழ் சினிமா கதாநாயகர்களாக களம் இறங்கியுள்ளனர்.இந்த சீசனில் அதிக முறை கலந்துகொள்ளாத புகழ் மீண்டும் இந்த வார நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியாக நடித்து களம் இறங்கியுள்ளார்.இந்த ப்ரோமோ வீடியோ வைரலாகி வருகிறது.

Embed video credits : vijay television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in