The Indian Times

ஆராரோ ஆரிராரோ…என தம்பியை மடியில் போட்டு தாலாட்டு பாடிய ஆல்யா மானசா மகள் AILA …| ALYA MANASA & SANJIEV

ராஜா ராணி தொடரில் கதாநாயகி மற்றும் கதாநாயகனாக நடித்து பிரபலமாகியவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.ராஜா ராணி என்று கூறினாலே நமது மனதில் முதலில் நினைவுக்கு வருவது இந்த ஜோடிகள் தான். சஞ்சீவ் முன்னதாக திரைப்படங்களில் நடித்து வந்தார்.இவர் முதன் முதலில் குளிர் 100 டிகிரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகினார்.பின்னர் ராஜா ராணி நாடகத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி கொண்டு நடித்து மக்களை கவர்ந்தார்.இந்த ராஜா ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஆல்யா.ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழக இறுதியில் நட்பு காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர்களுக்கு ஏற்கனவே ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த ஆல்யாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதனால் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.இவர்கள் தங்களது இனிமையான நேரங்களை மகன் மற்றும் மகள் உடன் செலவழித்து கொண்டு வருகின்றனர்.இருவரும் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துக்கொண்டு அதில் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் செலவு செய்யும் நேரத்தினை வீடியோவாக பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.தற்போது இன்று புதிய வீடியோவை வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோவும் வழக்கம் போல் அவர்களது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

இன்று இவர்கள் வெளியிட்டிருக்கும் வீடியோவில் மகள் ஐலா தம்பி அர்ஷை மடியில் போட்டு தாலாட்டி கொஞ்சியுள்ளார்.இதனை பார்க்கும் பொழுது அவ்வளவு மகிழ்ச்சியாக நமக்கே உள்ளது.பெற்றவர்களுக்கு இருக்காதா பின்னே,ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவின் பல ரசிகர்களும் தற்போது ஐலா மற்றும் அர்ஷின் ரசிகர்கள் ஆகிவிட்டனர்.இவர்கள் கொஞ்சுவதை பார்த்து சூப்பர் கியூட் என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்தும் வீடியோவிற்கு லைக்குகளை அள்ளிக்குவித்தும் வைரலாக்கி வருகின்றனர்.மேலும் அர்ஷ் சஞ்சீவ் கேட்கும் கேள்விகளுக்கு அப்பாவை பார்த்து சிரித்துள்ளார்.இந்த வீடியோவை பார்க்கும் பொழுது பலருக்கும் கவலை மறந்துள்ளதாக ரசிகர்கள் கருத்துக்களை கமெண்ட் செய்து வருகின்றனர்

Embed video credits : SANJIEV & ALYA

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in