The Indian Times

Dancing Rose ஆக கானா போட்டியில் கலக்கும் பாலா! Comedy Raja Kalakkal Rani Promo

விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் பிரபலமாக இருந்தாலும் காமெடியான நிகழ்ச்சிகளுக்கு என்றுமே ஒரு தனி ரசிகர்கள் உண்டு. அந்த வகையில் நிறைய காமெடி நிகழ்ச்சிகள் பிரபலமாகி இருக்கிறது. கலக்க போவது யாரு , அது இது எது என பல விஜய் டிவி பிரபலமான காமெடி நிகழ்ச்சிகள் இருக்கின்றது என்று சொல்லிக்கொண்டே போகலாம். இந்த நிகழ்ச்சிகளை விட ஒரு படி மேலே சென்றது

Advertisement

குக்கு வித் கோமாளி தான். தற்போதுள்ள அணைத்து இளைஞர்களையும் கவர்ந்து நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பலர் இன்று சினிமாவில் காலடி எடுத்து வைக்க துவங்கி விட்டனர். அந்த வரிசையில் இருப்பவர்கள் புகழ் , அஸ்வின் , பவித்ரா , சிவாங்கி இவர்களுக்கு ஏராளமான பட வாய்ப்புகள் தற்போது இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்து வருகிறது.

அதோடு மற்றொரு காமெடியான நிகழ்ச்சியை கொண்டுவந்தது விஜய் டிவி. அதுவே காமெடி ராஜா கலக்கல் ராணி. இதில் பாபா பாஸ்கர் , மதுரை முத்து, ராமர் , தங்கதுரை, அறந்தாங்கி நிஷா , பாலா என பல விஜய் டிவி பிரபலங்கள் கலந்துகொண்டு கலக்கி வருகின்றனர். தற்போது இந்த நிகழ்ச்சியின் இந்த வார ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த வாரம் சார்பட்டா பரம்பரை படத்தில் டாடி யாக நடித்த ஜான் விஜய் கலந்து கொள்கிறார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in