The Indian Times

குழந்தைகளுடன் குத்தாட்டம் போட்ட வெண்ணிலா கபடி குழு கதாநாயகி

குழந்தை நட்சத்திரமாக காதலுக்கு மரியாதை படத்தில் நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அறிமுகம் ஆகியவர் நடிகை சரண்யா மோகன்.இதனை தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.பின்னர் படிப்படியாக வளர்ந்து துணை நடிகையாக மாறினார்.யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.அதை தொடர்ந்து ஜெயம்கொண்டான் படத்திலும் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தினை தேடி வந்த சரண்யாவிற்கு,சுசீந்திரனின் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அப்படி சரண்யா நடிப்பில் வெளியாகிய படம் தான் வெண்ணிலா கபடி குழு.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து இவருக்கு தமிழ் சினிமாவில் படவாய்ப்புகள் வர தொடங்கியது.இவர் தமிழ்,மலையாளம்,தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.நடிகர் விஜய்க்கு தங்கையாக வேலாயுதம் படத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

Advertisement

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதில் இருந்து முழுவதும் விலகி கணவர் மற்றும் குழந்தைகளுடன் குடும்ப வாழ்க்கையை கவனித்து வருகிறார்.மேலும் பரதநாட்டிய கலைஞர் ஆன இவர் அடிக்கடி நடனம் ஆடி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிடுவார்.தற்போது இவர் குழந்தைகளுடன் என்ஜாய் செய்து இவரும் குழந்தையாக மாறி நடனம் ஆடியுள்ளார்.இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் வெண்ணிலா கபடி குழு கதாநாயகியா இது அடையாளமே தெரியாம மாறிட்டாங்க என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in