The Indian Times

என்ன அழகு.. எத்தனை அழகு.. சேலையில் சிலை போலவே மாறிய CWC சிவாங்கி

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியவர் சிவாங்கி.இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமார் மகள் ஆவார்.விஜய் தொலைக்காட்சியில் போட்டியாளராக அறிமுகமாகி தனது குரலால் பல ரசிகர்களை கவர்ந்தார்.இவரின் குரலுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.எப்பொழுதும் குழந்தை போல நகைச்சுவையாக சிவாங்கி வெளிப்படையாக பேசுவதால் பலருக்கும் பிடித்தமானவர் ஆகினார்.பெரும் பாடகியாக வேண்டும் என்பதே இவரது கனவு அதன்படி இவர் பல ஆல்பம் பாடல்களையும் பாடியுள்ளார்.இவரின் நகைச்சுவைக்கு அதிகளவில் ரசிகர்கள் உண்டு என்பதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.

Advertisement

இவரது நகைச்சுவை திறமைக்கு சரியான சவாலாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைத்த வாய்ப்பினை ஏற்றுக்கொண்டு அதை சரியாக பயன்படுத்தி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களம் இறங்கினார்.தான் எதார்த்த பேச்சுகளினாலும் நகைச்சுவைகளினாலும் மக்களை சிரிக்க வைத்து அவர்களது இதயத்தில் நீங்காத இடத்தினை பிடித்தார்.தொடர்ந்து 3 சீசன்களாக இந்நிகழ்ச்சியில் கலக்கி வருகிறார் சிவாங்கி.இவர் அங்கு செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லை அந்த அளவிற்கு செட்டில் கலாட்டா செய்து வருகிறார்.இவரின் வெகுளி தனமான பேச்சினால் பல ரசிகர்களையும் சிரிக்க வைத்து தனது வசம் இழுத்தார்.இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.அந்தளவிற்கு பிரபலம் ஆகிவிட்டார் சிவாங்கி.

Advertisement

தற்போது இவர் சேலையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் சேலையில் சிவாங்கி மிகுந்த அழகாக இருப்பதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.தற்போது இந்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.ரசிகர்கள் லைக்குகளை சிவாங்கி புகைப்படத்திற்கு அள்ளிக்குவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in