The Indian Times

தளபதி விஜய்க்கு கடும் காய்ச்சல்.. படப்பிடிப்பு முடித்து மருத்துவமனையில் அனுமதி – நடிகை குஷ்பு

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அது தளபதி விஜய் மட்டும் தான்.இவர் நடித்த அனைத்து படங்களும் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களுக்கு தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்த அளவிற்கு தளபதி விஜய் ரசிகர்கள் அவரை நேசித்து வருகின்றனர்.பல போராட்டங்கள் விமர்சனங்களை சந்தித்து எதிலும் விட்டுக்கொடுக்காமல் பின்வாங்காமல் தொடர்ந்து போராடி இன்று இவ்வளவு பெரிய இடத்தினை அடைந்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அண்மையில் சன் பிக்சர் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி நடிப்பில் உருவாகிய பீஸ்ட் படம் எதிர்பார்த்த வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை.இதனால் தனது அடுத்த படத்தில் உஷாராக நடித்து வருகிறார் விஜய்.இவரின் 66வது படத்தினை தோழா படத்தினை இயக்கிய வம்சி இயக்கி வருகிறார்.வாரிசு என இப்படத்திர்ற்கு படக்குழு பெயரிட்டுள்ளது.இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா நடித்து வருகிறார்.மேலும் சரத்குமார் ,ஷியாம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.இப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது

Advertisement

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை குஷ்பூ ,அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் , விஜய் இவ்வளவு உயரம் செல்வதற்கு காரணம் அவர் அன்று இருப்பது போல இருந்து வருகிறார்,சிறிது கூட மாற்றம் இல்லை,படப்பிடிப்பில் செல்போனை உபயோகிக்க மாட்டார், வசனங்களை அடிக்கடி கையில் வைத்து படித்துக்கொண்டே இருப்பார்,படப்பிடிப்பு நிறைவு நாளில் விஜய்க்கு 103 டிகிரி காய்ச்சல் இருந்தது,இருப்பினும் தன்னால் தடை படக்கூடாது படப்பிடிப்பு என அந்த காட்சியில் நடித்து முடித்தார்.அதன்பின்னர் தான் மருத்துவமனைக்கே சென்றார்.அங்குள்ள தரையில் தான் படுப்பார்,படப்பிடிப்புக்கு அழைத்த உடனே எழுந்து வருவார் என கூறியுள்ளார்.

Embed video credits : CINEULAGAM

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in